சுபோத் அதிகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபோத் அதிகாரி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
02-மே-2021
முன்னையவர்சுப்ரான்சு ராய்
தொகுதிபீசப்பூர்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மாவட்ட பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14-சூன்-2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21-சூலை-1972 (வயது 51)
காலிசகர், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
துணைவர்ரிங்கு அதிகாரி
பிள்ளைகள்சர்விக் அதிகாரி, சினேகா அதிகாரி
வாழிடம்(s)கர்னல்.கே.பி குப்தா சாலை, காலிசகர்,வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம்
முன்னாள் கல்லூரிமகாத்மா காந்தி பல்கலைக்கழகம், மேற்கு வங்காளம்
தொழில்அரசியல்வாதி

சுபோத் அதிகாரி (Subodh Adhikary) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில், பீசப்பூரில் இருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் மாவட்டப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

தொழில்[தொகு]

அதிகாரி வடக்கு 24 பர்கானா மாவட்டம் கலிசாகரைச் சேர்ந்தவர். மேற்கு வங்காளத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு இளங்கலை தேர்ச்சி பெற்றார். இவரது தந்தை பெயர் சந்தோசு அதிகாரி. [3] இவர் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பீசப்பூர் விதான் சபாவிலிருந்து போட்டியிட்டு, முகுல் ராயின் மகன் சுப்ரான்சு ராயை எதிர்த்து வெற்றி பெற்றார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Subodh Adhikary Election Results 2021: News, Votes, Results of West-bengal Assembly" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  2. "West Bengal assembly election 2021: Full list of winners" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  3. "Subodh Adhikary(All India Trinamool Congress(AITC)):Constituency- BIJPUR(NORTH 24 PARGANAS) – Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  4. "Subodh Adhikary | West Bengal Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  5. "Trinamool tsunami washes away BJP in Barrackpore". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபோத்_அதிகாரி&oldid=3846791" இலிருந்து மீள்விக்கப்பட்டது