சீலா தீக்‌சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீலா திக்‌சித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஷீலா தீக்சித் Sheila Dikshit

பேட்டிக்கு பதிலளிக்கு ஷீலா

பதவியில்
1998- தற்போது வரை பதவியில்
முன்னவர் சுஷ்மா சுவராஜ் [1]
பின்வந்தவர் Incumbent
தொகுதி புது தில்லி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு மார்ச்சு 31, 1938 (1938-03-31) (அகவை 75)
கபுர்தலா, பஞ்சாப்
வாழ்க்கைத்
துணை
வினோது திக்சித் (இறந்தார்)
பிள்ளைகள் மகளும் மகனும் [2]
இருப்பிடம் புது தில்லி
November 12 இன் படியான தகவல், 2008
மூலம்: Government of Delhi

ஷீலா தீட்சித் (மார்ச் 31, 1938 ஆம் ஆண்டு பிறந்தார்) 1998 ஆம் ஆண்டு முதல் தில்லியின் முதல் மந்திரியாக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நவம்பர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலில் வியக்கதக்க வெற்றி பெற்று தில்லி அரசின் முதல் மந்திரியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் திக்‌ஷித் பதவியேற்றார். இவர் தில்லியின் இரண்டாவது பெண் முதல் மந்திரி ஆவார், மேலும் தில்லி சட்டப் பேரவையில் புது தில்லி தொகுதியின் பிரதிநிதியாகவும் உள்ளார்.

பொருளடக்கம்

ஆரம்பகால வாழ்க்கை [தொகு]

பஞ்சாபின் காபுர்தாலாவில் ஷீலா திக்‌ஷித் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை புது தில்லியில் உள்ள கான்வெண்ட் ஆப் ஜீசஸ் அண்ட் மேரி பள்ளியிலும், பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்றார், முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோ மாவட்டத்தின் உகு கிராமத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற சுதந்திர போராட்டத் தியாகியும் முன்னாள் ஆளுநர் மற்றும் மத்திய மந்திரியுமான உமாசங்கர் திக்‌ஷித் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது காலம் சென்ற கணவர் வினோத் திக்‌ஷித் மதிப்பு மிக்க இந்திய ஆட்சிப்பணி சேவை அதிகாரியாவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், காங்கிரஸ் கட்சிக்காக கிழக்கு தில்லியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தீப் திக்‌ஷித்[1] என்ற மகனும், லத்திகா சையத் என்ற மகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை [தொகு]

1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் உத்தரப் பிரதேசம் கானூஜ் பாராளுமன்ற தொகுதியின் பிரதிநிதியாக ஷீலா இருந்தார். பாராளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றிய இவர் மக்களவையின் மதிப்பீட்டு செயற்குழுவிலும் பணியாற்றினார். இந்தியாவின் நாற்பதாவது சுதந்திர தின நினைவு விழாவின் செயலாக்க செயற்குழு மற்றும் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு நினைவு விழாவிலும் டாக்டர் திக்‌ஷித் தலைவராக இருந்தார். பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் (1984-1989) பணியாற்றினார். காங்கிரஸ் செயற்குழுவின் தில்லி பகுதித் தலைவராக பணியாற்றி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவைத்தார்.

மத்திய அமைச்சராக 1986-1989 களில் பணியாற்றினார், முதலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் சார் அமைச்சராக பிறகு பிரதம மந்திரி அலுவலகத்தின் சார் அமைச்சராகவும் பணியாற்றினார். உலக மேயர் விருதுக்காக 2008 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். தில்லியின் முதல் மந்திரியாக திக்‌ஷித் பணியாற்றிய போது 2008 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலிருந்து சிறந்த முதல் மந்திரிக்கான விருது பெற்றார். 2009 ஆம் ஆண்டு NDTV வழங்கும் அந்த ஆண்டின் சிறந்த அரசியல்வாதி விருதையும் பெற்றார்.

பங்களிப்புகள் [தொகு]

இந்தியாவின் பிரதிநிதியாக பெண்களின் நிலைக்கான ஐ.நா (U.N.) ஆணையத்தில் ஐந்து ஆண்டுகாலம் (1984 - 89) பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23 நாட்கள் இவரும் இவரது சகபணியாளர்கள் 82 பேரும் மாநில அரசால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது சம்பவத்தினால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான உத்தரப் பிரதேச மக்கள் தாங்களும் இயக்கத்தில் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக 1970களில் தொடக்கத்தில் இளம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இருந்த போது வேலை செய்யும் பெண்களுக்காக தில்லியில் இரண்டு விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளராகவும் உள்ளார். சர்வதேச புரிந்துணர்வு மேம்பாட்டில் அந்த அறக்கட்டளை முதன்மையான பங்கு வகித்தது. அவ்வறக்கட்டளை அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திராகாந்தி விருதை வழங்குகிறது, மேலும் சர்வதேச விவகாரங்களுக்கான மாநாடுகளையும் நடத்துகிறது.

குறிப்புதவிகள் [தொகு]

இணைப்புகள் [தொகு]

முன்னர்
சுஷ்மா சுவராஜ்
முதலமைச்சர், தில்லி
1998 –
பின்னர்
தற்போதைய முதலமைச்சர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_தீக்‌சித்&oldid=1421027" இருந்து மீள்விக்கப்பட்டது