அரவிந்த் கெஜ்ரிவால்
| அரவிந்த் கெஜ்ரிவால் | |
|---|---|
அரவிந்த் கெஜ்ரிவால் |
|
| பிறப்பு | 1968 |
| அமைப்பு(கள்) | பரிவர்த்தன் (परिवर्तन) - குடிமக்கள் இயக்கம் |
| அரசியல் இயக்கம் | தகவல் பெறும் உரிமை |
| விருதுகள் | ரமன் மக்சேசே பரிசு |
அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு: 1968) அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகர். இந்தியாவின் தகவல் பெறும் சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராக போராடும் வகையில் அரசை பொறுபேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டது.[1]
வாழ்க்கை வரலாறு [தொகு]
அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968ஆம் ஆண்டில்[2] பிறந்தவர்.[3] ஐஐடி கரக்பூரில் 1989ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார்.[4] வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொணர பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.
சனவரி 2000ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் - என்ற தில்லியை மையமாகக்கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காக பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்.[5]
அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது. [3] நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து பரப்புரை யாற்றினார்.[6][7] மேலும் தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத்தொடங்கினார்.[8] இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்து பங்கேற்க தூண்டுகிறார்.
பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Citation The 2006 Ramon Magsaysay Award for Emergent Leadership-CITATION.
- ↑ In electing Kejriwal, 38,... Times of India, 31 Jul 2006.
- ↑ 3.0 3.1 Profile IIT Kanpur Alumni Association. Satyendra K. Dubey Memorial Award citation.
- ↑ Profile at Ashoka Fellow website Citation.
- ↑ About us Parivartan Official website.
- ↑ Don’t throttle RTI Arvind Kejriwal, livemint, Jul 6 2007.
- ↑ [1] Google explaining Right to Information Act
- ↑ [2] RTI Award Website.
வெளி இணைப்புகள் [தொகு]
- 'Parivartan' Official website
- 'Public Cause Research Foundation' Official website
- Arvind Kejriwal Interview BBC Hindi
- Arvind Kejriwal Interview BBC Hindi - Audio
- Jaago Re! "Usse kuchh farak padega kya?": Arvind Kejriwal on fighting corruption in India
- An Interview with Arvind Kejriwal
- 'Lokraj Andolan'
- 'India Against Corruption'