சாயிட் அன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாயிட் அன்வர் (Saeed Anwar, செப்டம்பர் 6, 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் ரெஸ்ற் போட்டியில் ஆடினார்.

பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் அன்வர். மே 22, 1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாயிட்_அன்வர்&oldid=1005615" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்