சவுல் கிரிப்கே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுல் ஆரோன் கிரிப்கே ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், தருக்கவியலாளரும் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மையத்தில் கௌரவப் பேராசிரியராக இருந்துவருகிறார். தருக்கம், மொழிசார் மெய்யியல் ஆகியவை தொடர்பான பல துறைகளில் இவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இவரது ஆக்கங்களில் பல இன்னும் பதிப்பிக்கப்படாதவை ஆகவோ கையெழுத்துப் பிரதி, ஒலிநாடா ஆகிய வடிவங்களிலேயோ உள்ளன. மெய்யியல் மற்றும் தருக்கவியலுக்கான 2001 ஆம் ஆண்டுக்கான ஸ்கொக் பரிசு (Schock Prize) இவருக்கு வழங்கப்பட்டது.