சமர் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமர் அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சுந்தாசையூரசு
இனம்:
சு. சமரென்சிசு
இருசொற் பெயரீடு
சுந்தாசையூரசு சமரென்சிசு
(இசுடீரீ, 1890)

சமர் அணில் (Samar squirrel-சுந்தாசையூரசு சமரென்சிசு) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது வரலாற்று ரீதியாக லாலாங்சிங் என்று அழைக்கப்பட்டது.[2] இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது சமர் மற்றும் லெய்டே தீவுகளில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். மனித செயல்பாடுகள் அதிகரித்தல், வேட்டையாடுதல் மற்றும் சிற்றினங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால் இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இவை பாசி காடுகளின் கீழ் விளிம்புகள் உட்பட முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தாழ் நிலம் மற்றும் மலைப்பாங்கான காடுகளில் வளர்கின்றன. இது சில விவசாயப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chiozza, F. (2016). "Sundasciurus samarensis". IUCN Red List of Threatened Species 2016: e.T21162A22249465. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21162A22249465.en. https://www.iucnredlist.org/species/21162/22249465. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Alcina, Ignacio (1996). Historia Natural de Islas Bisayas. Consejo Superior de Investigaciones Cientificas. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-00-07623-0.
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  • Chiosa, F. 2016. Sundasciurus samarensis. The IUCN Red List of Threatened Species 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமர்_அணில்&oldid=3936404" இலிருந்து மீள்விக்கப்பட்டது