குபேரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||
குபேரன் இந்து சமயத்தில் செல்வத்தின் கடவுள் என்றும் செல்வத்தின் அதிபதி என்றும் இந்துக்கள் நம்புகின்றார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது.
குபேரனின் மனைவியாக யட்சி என்ற பெண்ணை இந்துக்கதைகள் கூறுகின்றன. நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்கள் குபேரனுக்கு இருப்பதாக மகாபாரதக் கதை கூறுகிறது. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
[தொகு] இலங்கையர் நம்பிக்கை
இலங்கையில் குறிப்பாக சிங்களவர் குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளனர். இலங்கையில் இராவணனின் ஆட்சிக்கு முன்பு இலங்கையை ஆண்டதாகவும் இலங்கை சிங்களவரிடையே நம்பிக்கைகள் உள்ளன.[1]