பிருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகரிஷி பிருகு, சப்தரிஷிகளுள் ஒருவர். பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவததர்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர். அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார். ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில், இவர் எழுதிய பிருகு சம்ஹிதா எனும் நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. இவரது துணைவியின் பெயர் கியாதி ஆகும். இவர் தக்க்ஷனின் மகளாவார். இவர்களுக்கு ததா, விததா, சுக்ரன் என்ற மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உண்டு.

கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை அறுபடை வீடுகளில் நான்கவதாக முருகனுக்கு அமைந்த வீடு. அப்படியென்றால் பெருமாளை பிரதான படுத்தி ஞானத்தை கூறிய பிருகு முனிவருக்கும் இந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்?? மேலும் இங்கு தான் முருக பெருமான் பிரணவத்தின் ரகசியத்தை தகப்பனுக்கு உணர்த்திய இடம்.

புராணங்கள் பிருகு முனி இங்கு கடும் தவம் புரிந்ததாகவும், அந்த தவத்தை யார் கலைதாலும் அவர்கள் தன் நினைவு எல்லாம் மறக்கும் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் அவரின் தவம் மிக கடுமையாக இருந்தது. தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை தேவலோகத்தை தாக்கியது. தேவர்கள் பயம் கொண்டு ஈஸ்வரனை சரண் அடைந்தனர். ஈசன் தன் கையால் பிருகுவின் தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை மூடினார். இதனால் பிருகுவின் தவம் கலைந்தது அதனால் அத்தன் பிரணவத்தை மறந்தார். அதனை மறுபடியும் முருக பெருமான், தந்தைக்கு நினைவு படித்தினார்


பிருங்கி முனிவர் வரலாறு* > > முனிவர்கள் பலருள் சிவனின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர் பிருங்கி. மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். தீவீரம் என்றால் அதி தீவீரம். சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார். அது அந்த சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட. அந்த அளவுக்குச் சிறந்த பக்தியுடையவர். > > ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் வந்தார் பிருங்கி முனிவர். அங்கே தம்பதி சமேதராய், சிவ பார்வதி ரூபமாய் ரி சபாரூடனராய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தனர் இருவரும். முனி வர்கள் பலரும் அவர்களை வலம் வந்து தொழுது வணங்கிக் கொண்டிருந்தனர். > > ஆனால் பிருங்கியோ இறைவனை வணங்க மனம் ஒப்பாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். காரணம், சிவனோடு சக்தியும் உடன் இருந்ததே. சிவனை மட்டுமே இதுகாறும் வணங்கி வந்த தாம், சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணினார் முனிவர். அதனால் ஔர் முடிவிற்கு வந்தார். > > சிவனை மட்டுமே வழிபட எண்ணித் தம்மை ஔர் வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் சென்று வி ட்டார். > > இதனால் கடும் கோபம் கொண்டாள் சக்தி. தன்னை முனி வர் அவமானப்படுத்தி விட்டதாகவும் கருதினாள். "என்னை வணங்காத உனக்கு என் சக்தி மட்டும் எதற்கு?. அதனை எனக்கே கொடுத்து விடு" எனச் சினத்துடன் கட்டளையிட்டாள். > > "அவ்வாறே தந்தேன்" என முனிவர் கூறி தமது சக்தியைத் துறந்தார், வெறும் எலும்புக் கூடாய், நிற்கக் கூடத் திராணியற்றுக் கீழே விழப் போன அவரை, சிவன் தனது கோலைக் கைப்பி டியாய்த் தந்து காப்பாற்றினார். > > பின்னர் பார்வதியை நோக்கி, "நானும் நீயும் சரி சமம் என்று உணராமல், நீ என்னில் பாதி என்பதையும் மறந்து, என்னை வணங்குவதும் உன்னை வணங்குவதும் ஒன்று தான் என உணராமல், எனது பக்தனைத் துன்பத்திற்கு உள்ளாக்கியதால், நீ சிவ அபராதம் செய்தவளாகிறாய். எனவே இந்தப் பாவம் நீங்கப் பூவுலகம் சென்று தவம் செய்" எனக் கட்டளையிட்டார். > > அவ்வாறே தேவியானவள் பூவலகம் வந்து தவம் செய்து இறைவன் அருள் பெற்றாள். அவள் அவ்வாறு தவம் செய்த தி ருத்தலம் தான் திருநாகேஸ்வரம். > > அங்கு மற்ற இடங்களைப் போலல்லாது, இறைவனும், இறைவி யும் தனித் தனியே வீற்றிருக்கின்றனர். வெளிப்பிரகாரத்தி ல் அம்பாள் சன்னதி உள்ளது. கோயிலின் உட்புறத்தே இறைவன் வீற்றிருக்கின்றார். > > இறைவன் பெயர் ஸ்ரீசெண்பகாரண்யேசுவரர் > > இறைவி பெயர் கிரிஜ குஜாம்பாள். > > இறைவிக்கு, தவக் கோலத்தில் இருப்பதால், இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக அபிஷேக ஆராதனை கிடையாது. வருடம் ஒரு முறை பச்சைக் கற்பூரம் போன்றவை கொண்டு காப்பிடப்படுகி றது. > > சிவன் அது போன்றே பிருங்கி முனிவரிடம், " சிவனும் சக்தியும் ஒன்று என அறியாமல் நீர் நடந்து கொண்டதால், பூவுலகம் சென்று தவம் செய்து என்னை அடைவீராக" எனக் கட்டளையிட்டார். > > அவ்வாறே பிருங்கி முனிவர் பூவுலகம் வந்து தவம் செய்தார். அவ்வாறு அவர் தவம் செய்த மலை தான் பிருங்கி மலை. அது தான் பின்னர் மருவி பரங்கி மலையாகி உள்ளது. (பறம்பு மலை, பிறம்பு மலையாகிப் பின்னர் பிரான் மலையானது போல்). > > அவ்வாறு பிருங்கி முனிவர் தவம் செய்து வழிபட, இறைவன் அவருக்கு நந்தி ரூபமாய்க் காட்சி அளித்தார். அவ்வாறு காட்சி அளித்த தலம் தான், சென்னை, பரங்கிமலை இரயி லடி அருகே உள்ள நந்தீசுவரர் ஆலயம். > > இறைவன் பெயர் நந்தீசுவரர் > > இறைவி பெயர் ஆவுடை நாயகி > > இத் திருத்தலத்திலிருந்து நேரே நோக்கினால் பரங்கிமலை தெரி யும். காஞ்சி மகாப் பெரியவரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து சிறப்பித்ததுடன், இதன் பெருமையை எடுத்துரைத்துள்ளார்கள். இது பற்றிய வரலாற்றுக் குறிப்பினை இத்திருக்கோயிலில் காணலாம். > > மிகவும் பழங்காலத் திருத்தலம் என்பது கோயிலின் அமைப்பி னைப் பார்க்கும் பொழுதே விளங்கும். > > வாய்ப்புள்ளவர்கள் சென்று வரலாமே!. பிருங்கியின் அருளும் பெற்று வரலாமே! > > > * பிருங்கி முனிவர் பற்றிய வரலாற்றினைத் தெரிவித்தவர் மி கவும் வயதான ஒரு பெரியவர். திருநாகேசுவரத்தில், கிரி ஜகுஜாம்பாள் சன்னதி அருகே வாயிற்புறத்தில் அமர்ந்திருப்பார். வருவோர் போவோரிடம் வாய் ஔயாமல் பிருங்கி முனிவரின் கதையைக் கூறிக் கொண்டிருப்பார். பல் இல்லாததாலும், அவர் பேச்சு மிகவும் குழறலாக இருப்பதாலும், அவர் கூறுவதை பெரும்பாலும், யாரும் செவி மடுப்பதில்லை. மேலும் பலருக்குப் பல்வேறு அவசரம் வேறு. சிலர் பணத்திற்காக அவ்வாறு கூறுகி ன்றாரோ எனக் கருதி மறுதலித்துச் செல்கின்றனர். அவர் யாரிடம் காசு கேட்பதில்லை. யாராவது பணமோ, பழம் போன்றவை கொடுத்தாலோ மறுப்பதும் இல்லை. எனக்கு, முதலில் அவர் கூறி யது புரியாததால், திரும்பக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். சலி ப்பேதும் படாமல் கூறினார். > > பிருங்கி முனிவர் வரலாறு பற்றி ஏதும் புத்தகத்தில் வந்துள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிருகு&oldid=1640469" இருந்து மீள்விக்கப்பட்டது