கார்ல் சேகன்
| கார்ல் சேகன் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 9, 1934 |
| பிறப்பிடம் | புரூக்ளின், நியூ யார்க், அமெரிக்கா |
| இறப்பு | திசம்பர் 20 1996 (அகவை 62) |
| இறப்பிடம் | சியாட்டில், வாஷிங்டன், அமெரிக்கா |
| வாழிடம் | அமெரிக்கா[1] |
| தேசியம் | அமெரிக்கர் |
| துறை | வானியல் and கோள அறிவியல் |
| பணி நிறுவனம் | கார்னெல் பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | சேட்டி அமைப்பு காஸ்மோஸ் காண்டாக்ட் பேல் புளூ டாட் |
| விருதுகள் | ஓர்ஸ்டட் பதக்கம் (1990) நாசா சிறந்த பொதுச் சேவை பதக்கம் (இருமுறை) அபுனைவுக்கான புலிட்சர் பரிசு (1978) அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பொதுநல பதக்கம் (1994) |
கார்ல் சேகன் (Carl Sagan, நவம்பர் 9, 1934 – டிசம்பர் 20, 1996) ஒரு அமெரிக்க அறிவியிலாளர், வானியற்பியலாளர், வானியலாளர், அண்டவியலாளர் மற்றும் எழுத்தாளர். அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்குவதில் பெருவெற்றி கண்டவர். இவர் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், பத்திகள் எழுதியுள்ளார்; இருபதுக்குக்கும் மேற்பட்ட புத்தகங்களை தனித்தோ பிற எழுத்தாளர்களுடன் சேர்ந்தோ வெளியிட்டுள்ளார். தனது படைப்புகளில் அறிவியல் முறை (Scientific method), அறிவிய ஐயுறவியல் (Scientific skepticism) போன்றவற்றை பெரிதும் முன்வைத்துள்ளார். வேற்றுக்கோள் உயிரினங்களின் உயிரியலின் (Exobiology) முன்னோடியாகக் கருதப்படும் இவர், வேற்றுக் கோள்களில் அறிவாற்றல் உள்ள உயிர்களைத் தேடும் சேட்டி (SETI - Search for Extra-Terrestrial Intelligence) திட்டத்துக்கு தனது படைப்புகளின் மூலம் ஆதரவு தேடித்தந்தார்.
சேகனின் வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. 1980ல் அவர் எழுதி எடுத்துரைத்த காஸ்மோஸ் தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமடைந்தது. அபுனைவு புத்தகங்களைத் தவிர காண்டாக்ட் என்ற அறிபுனை புத்தகத்தையும் சேகன் எழுதியுள்ளார். அது அவரது மறைவுக்குப் பின்னர் 1997ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சேகன் தனது வாழ்நாளில் எம்மி, ஹூகோ, லோக்கஸ், புலிட்சர், அசிமோவ் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளார்.
குறிப்பிடத்தக்க புத்தகங்கள் [தொகு]
- டிராகன்ஸ் ஆஃப் ஈடன் (Dragons of Eden)
- காஸ்மோஸ் (Cosmos)
- புரோகாஸ் பிரெய்ன் (Brocas' Brain)
- தி பேல் புளூ டாட் (The Pale Blue Dot)
- காண்டாக்ட் (Contact)
- தி டீமன் ஹாண்டட் வோர்ல்டு (The Demon Haunted World)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Sagan, Carl (1994). Pale Blue Dot: A Vision of the Human Future in Space (1st ed.). New York: Random House. p. 68. ISBN 0-679-43841-6.