எம்மி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மி விருது
விளக்கம்தொலைக்காட்சியில் சிறப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS)/ தேசிய தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (NATAS)
முதலில் வழங்கப்பட்டது1949
இணையதளம்http://www.emmys.tv/awards ATAS அலுவல்முறை எம்மி இணையதளம்]
[http://www.emmyonline.tv/ NATAS அலுவல்முறை எம்மி

எம்மி விருது (Emmy Award), பெரும்பாலும் எம்மி என்றே அறியப்படும் விருது அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் துறையில் மனமகிழ்ச்சி நிகழ்ச்சிகளை குவியப்படுத்திய ஓர் விருதாகும். இது திரைப்படங்களுக்கான அகாதமி விருது மற்றும் இசைக்கான கிராமி விருது போன்றது.[1][2]

தொலைக்காட்சியின் பல்வேறு துறைகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. வழங்கப்படும் விருதின் துறையைப் பொறுத்த விழாக்களில் ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டின் முழுமையும் வழங்கப்படுகிறது. இவற்றில் கூடுதலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை முதன்மைநேர எம்மிக்கள் (மாலை 7 மணி முதல் 10 மணிவரை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்குரியவை) மற்றும் பகல்நேர எம்மிக்களாகும். மற்ற பிற எம்மிக்கள் விளையாட்டு எம்மி விருது, செய்தி மற்றும் ஆவணமாக்கல் எம்மி விருது, வணிக மற்றும் நிதிய நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருது, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பன்னாட்டு எம்மி விருது, தொழில்நுட்பம் மற்றும் பொறியியலுக்கான எம்மி விருது ஆகியனவாகும். தவிர மாநில மற்றும் உள்ளூர் திறமையை பாராட்டி வட்டார எம்மி விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆனால் தனித்த அமைப்புகள் எம்மி விருதுகளை வழங்குகின்றன: தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS), தேசிய தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமி (NATAS), மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி.[3] ஒவ்வொன்றும் குறிப்பிட்ட எம்மி விருதுகளை நிர்வகிக்க பொறுப்பானவையாக உள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BBC Learning English | Emmy awards
  2. "Emmys For Dame Helen/The Sopranos - Reality TV | Photos | News | Galleries". Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Awards". Academy of Television Arts & Sciences. பார்க்கப்பட்ட நாள் 2008-06-21.
  4. "History of the Television Academy". Academy of Television Arts & Sciences. பார்க்கப்பட்ட நாள் 2008-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மி_விருது&oldid=3545910" இலிருந்து மீள்விக்கப்பட்டது