காஞ்சா அய்லைய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காஞ்சா அய்லைய்யா (Kancha Ilaiah, அக்டோபர் 5, 1952) ஒசுமனியா பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை முதன்மைப் பேராசிரியர். இவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். இந்திய சாதியத்துக்கு எதிரான முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர். இவரது பார்வைகள் இந்து சமய எதிர்ப்புக் கொண்டவை என்று இந்து சமய அமைப்புகள் கூறுகின்றன. இவர் பல ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்.

இளமைப் பருவம்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் வாரங்கல் மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். ஆடுகளை வளர்த்து மேய்க்கும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர். காஞ்சா அய்லைய்யா இளம் அகவையிலேயே ஆடுகள் வளர்த்தல், நிலத்தை உழுது வேளாண்மை செய்தல், கயிறுகள் தயார் செய்தல் ஆகியவற்றைச் செய்தார்.இவருடைய தாய் கொடுஞ்செயல்கள் புரிந்த காட்டு அதிகாரிகளை எதிர்த்துப் போராடி உயிரை இழந்தார்.இவர் தம் தாயைப் பற்றி தெலுங்கில் ஒரு கட்டுரை எழுதினார். இவர் மாணவப் பருவத்தில் மார்க்சியக் கொள்கையருடன் நட்பும் தொடர்பும் கொண்டு மார்க்சிய நூல்களைப் படித்தார். மாணவர்கள் நடத்திய போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • Why I am not a Hindu- A Sudra critique of Hindutva Philosophy, Culture and Political Economy
  • God as a Political Philosopher
  • Buffalo Nationalism:A Critique of Spiritual Fascism
  • Budha's Challenge to Brahminism
  • Post-Hindu India-A Discourse in Dalit-Bahujan Socio Spiritual and Scientific Revolution.
  • Untouchable God

உசாத்துணை[தொகு]

http://kafila.org/2014/09/01/a-civil-war-is-on-the-doorstep-of-india-interview-with-kancha-ilaiah-by-mahmood-kooria/

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சா_அய்லைய்யா&oldid=1720628" இருந்து மீள்விக்கப்பட்டது