கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கோத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் காங்கோ நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் தற்போது ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் அலுவல் நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள்[ஆதாரம் தேவை].சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்[ஆதாரம் தேவை]. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் காங்கோவில் வசித்து வருகிறார்கள்[ஆதாரம் தேவை]. தலைநகர் கின்ஷசாவில் மட்டுமே ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்[ஆதாரம் தேவை]. நாட்டின் முக்கிய நகரங்களான லுபம்பாஷி, கோமா மற்றும் கிசங்காணி போன்ற நகரங்களிலும் தமிழர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.
அமைப்புகள்[தொகு]