மலேசியத் தமிழர்
மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் எனலாம். இன்று மலேசியாவில் சுமார் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் இருந்தாலும், குடியேற்றவாத காலப்பகுதியில் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடிவழியினரே, பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் ஆவார்கள். இங்கு வேலைக்கு வந்த இலங்கைத் தமிழர்களும் இவர்களில் கணிசமான தொகையினர்.
[தொகு] உரிமைப் போராட்டங்கள்
மலேசியத் தமிழர்களின் பல உரிமைகள் மலேசியாவில் மறுக்கப்படுவதாகக் கூறி மலேசிய இந்திய குடிவழித் தமிழர்கள் இண்ட்ராப் எனும் இயக்கத்தின்வழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதற்கு பொ.வேதமூர்த்தி, பொ.உதயகுமார் எனும் இரு மனித உரிமை வழக்கறிஞர்கள் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கின்றனர். தற்சமயம் அவ்வியக்கத்தின் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள்
- மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (1/2)2
- மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
|
||||||||||||||||||||||||||||||||||||||||