மியன்மார் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர்மா தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாங்கோனில் உள்ள சிறீ காளி கோவில்

தமிழ்நாட்டில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தொழிலாளர்களாகவும் அரச சேவர்கர்களாகவும் பர்மா(மியான்மார்) கொண்டு செல்லப்பட்டவர்களின் வம்சாவழியினர் பர்மா தமிழர் ஆவர். ஆரம்பத்தில் 500 000 மேற்பட்டவர்களாக இருந்தார்கள். தமிழர்களில் செட்டியார் எனப்பட்டவர்கள் ஆதிக்க சக்தியாக மாறி பர்மிய விவசாயிகளின் நலன்களை பாதிக்குமாறு நடந்துகொண்டார்கள்.[1] அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியில் பெரும்பாலான தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இருப்பினும் இன்றும் பர்மாவில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பர்மா அரசு அவர்களுக்கு தமிழ்க் கல்வியையோ, பண்பாட்டையோ பேண இடமளிக்கவில்லை என்ற படியால் பலர் பர்மா மைய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். இருப்பினும் குறிப்பிடத்தக்க தொகையினர் தமிழ் அடையாளத்தோடும் இன்றும் பர்மாவில் வசிக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் பராசக்தியில் பர்மா தமிழர் அகதியாக தமிழ்நாடு திரும்புகையில் சந்திக்கும் அவலங்கள் காட்டப்பட்டுள்ளன.

ரங்கூனில்(தற்போதைய யாங்கோன்) இருந்து தனவணிகன் என்ற நாளேடு சில ஆண்டுகள் வெளியானது.

இவற்றையும் பாக்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.tamilnation.co/diaspora/myanmar.htm

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மியன்மார்_தமிழர்&oldid=1242145" இருந்து மீள்விக்கப்பட்டது