உள்ளடக்கத்துக்குச் செல்

களமச்சேரி மகாகணபதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களமச்சேரி மகாகணபதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வடக்கு களமசேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலில் கணபதி மற்றும் சுப்பிரமணியன், நவகிரகங்கள், சிவன், பார்வதி, ராமர் ஆகிய கடவுளர்கள் உள்ளனர்.

வரலாறு[தொகு]

இக்கோயில் 1981 ஆம் ஆண்டு களமச்சேரி நகரத்தில் வாழ்ந்த ஒரு முக்கிய பக்தரான என். ரெகுநாத மேனனால் கட்டப்பட்டதாகும்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் ஆரம்பத்தில் ஒரு எளிய கட்டுமானமாக, கணபதி, சுப்பிரமணியர் (நவக்கிரகங்களுடன்) ஆகிய சன்னதிகளுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ள இரண்டு கான்கிரீட் கட்டமைப்புகளுக்குள் இருந்தது. இதனிடையில் பல கடவுளர்களைக் கொண்ட, மிக சமீபத்திய உயரமான கட்டமைப்பிற்கு செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. சிவன், பார்வதி, ராமர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர் ஆகியோருக்கான புதிய சன்னதிகள் 2000ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. முழுக்கட்டுமானப் பகுதியும் சுமார் 5,000 சதுர அடிகள் (460 m2) பரப்பளவில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிப்புற சுவர்கள் இல்லை. கணபதி சன்னதிக்கு எதிரில் அரச மரம் உள்ளது. கோயில் வளாகத்தில் மைதானம் உள்ளது. பரபரப்பு நிறைந்த ஏலூர் - களமச்சேரி சாலை இக்கோயிலுக்கு முன்னால் செல்கிறது. கோயிலின் முன்புறத்தில் சாலையின் இடைவெளி மிகவும் குறுகியதாக (சுமார் 30 அடி) இருப்பதால், இக்கடவுளை 'சாலையோர கணபதி' என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளார்.[1]

நிகழ்வுகள்[தொகு]

யானைகளை விநாயனின் அவதாரமாக பக்தர்கள் குறிப்பிடுவர். இக்கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக மலையாள நாட்காட்டியின் கார்க்கிடகோம் மாதத்தின் முதல் நாளில் பெரிய அளவில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹவனம், ஆனையூட்டு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கஜபூஜை நடத்தப்படுகிறது. [2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]