கட்டக்காமன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டக்காமன்பட்டி
—  நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கட்டக்காமன்பட்டி தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டதும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும்[3]. இதைக் கட்டாம் பட்டி என்றும் அழைப்பர். ஆந்தராவிலிருந்து வந்த கட்டக்கமநாயக்கர் ஆண்டதால் இந்த பெயர் வந்ததாகக் கூறுவர். [சான்று தேவை]

தொழில்[தொகு]

உழவுத் தொழிலே முதன்மையானது. வீரன் சுந்தரலிங்கம் குளம், மஞ்சள் ஆறு நதி ஆகியவற்றின் நீரை உழவுக்கு பயன்படுத்துகின்றனர்.

பண்பாடு[தொகு]

இடமலை கருப்பு, பிடாரியம்மன் சாமி, முத்தாலம்மன், கணவத்தான் ஆகியோரை குல தெய்வமாக வணங்குகின்றனர்.

கட்டக்கமநாயக்கரின் குலதெய்வமான [சான்று தேவை] வேட்டைவிராயன் கோயிலும் உள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு பள்ளர் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 6000 இருக்கும்.

நிலப் பிரிவுகள்[தொகு]

இக்கிராமத்தில் மேற்குத்தெரு, இந்திரா காலனி, நடுத்தெரு, கிழக்குத்தெரு, இமானுவேல் நகர், மேலக்காலனி, மண்டுக்கொவில் தெரு, 110 காலனி, பெரியகுளம் முதன்மைச் சாலை, பழைய வத்தலகுண்டு சாலை, பேருந்து நிலையம், முத்தாலம்மன் கோவில் தெரு, பிடாரியம்மன் கோவில் தெரு, வேட்டைவிராயான் கோவில் தெரு, இடமலையான் கோவில் சாலை, குளத்துக்கரை, கோடை குறிஞ்சி நகர் கோதுமைகரடு பிரிவு, கோட்டைப்பட்டி குறுக்கு சாலை ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த கிராமத்தின் கிழக்கே வத்தலகுண்டும், வடகிழக்கே வீரன் சுந்தரலிங்கம் குளமும், மேற்கில் கொடைக்கானல் சாலையும், வடக்கே இடமலையான் கோவிலும், வடமேற்கே மஞ்சள் ஆறும், தென்கிழக்கே சென்ராயப்பெருமாள் கோவிலும், தெற்கே காடுகளும் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

கல்வியறிவு[தொகு]

இங்குள்ள மக்களில் 85% பேர் கல்வியறிவு உடையவர்களாகவும், அதில் 60% பேர் பட்டதாரிகளாகவும், 20% உயர் பதவிகளிலும் மற்றும் 30% பேர் போக்குவரத்து கழகம், மின்சாரம் வாரியம், அஞ்சல் துறை, காவல் மற்றும் ரயில் துறைகளிலும், 40% பேர் சுயமாகவும், பிற தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும், 5% பேர் பெரிய விவசாயங்களிலும், 15 % உழவுத் தொழிலும் சொந்தமாக நன்செய் நிலங்கள் வைத்தும், மீதமுள்ளவர்கள் புன்செய் மற்றும் குத்தகை நிலங்களிலும் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டக்காமன்பட்டி&oldid=3547381" இலிருந்து மீள்விக்கப்பட்டது