கங்கா தேவி (மக்களவை உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கா தேவி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1977
பின்னவர்இராம் லாக் குரீல்
தொகுதிமோகன்லால்கஞ்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-12-10)10 திசம்பர் 1916
தேராதூன், உத்தராகண்டம்
இறப்பு24 மே 1984(1984-05-24) (அகவை 67)
காசியாபாத், உத்தரப்பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜெய்பால் சிங்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

கங்கா தேவி (Ganga Devi; 10 திசம்பர் 1916-24 மே 1984) இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1952, 1957, 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தின் மோகன்லால்கஞ்சி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டில் இராம் லால் குரீல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[1][2][3][4][5]

இளமை[தொகு]

சந்தா லாலின் மகள் கங்கா தேவி, உத்தரப்பிரதேசத்தின் தேராதூனில் (இப்போது உத்தராகண்டம்) 1916 திசம்பர் 10 அன்று பிறந்தார்.[6] தேராதூனில் உள்ள மகாதேவி கன்யா பாத்ஷாலா மற்றும் டி. ஏ. வி கல்லூரி பின்னர் வாரணாசியில் உள்ள பனராசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[6]

தொழில்[தொகு]

கங்கா தேவி 1952 முதல் 1954 வரை இந்திய பட்டியலிடப்பட்டோர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உதவித்தொகை வாரியத்திலும், 1952 முதல் 1954 வரையிலான தேயிலை மற்றும் காபி வாரியத்திலும், 1958 முதல் 1960 வரையிலான மத்திய சமூக நல வாரியத்திலும் பணியாற்றினார். 1950 முதல் 1953 வரை மீரட்டில் உள்ள ஊழியர் சங்கத்திலும், அகில இந்தியப் பட்டியல் சாதி மேம்பாட்டுச் சங்கத்திலும் இருந்தார். இவர் ராஷ்டிரியச் சேவா சங்கதனின் அமைப்பாளராகவும், அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சங்கத்தின் தலைவராகவும், மகளிர் பிரிவின் நிறுவனராகவும், ராஷ்டிரியச் சேவை சன்ஸ்தானின் தலைவராகவும் இருந்தார்.[6]

தேவி 1952 முதல் 1957 வரை முதல் மக்களவை உறுப்பினராகவும், 1957 முதல் 1962 வரை இரண்டாவது மக்களவை உறுப்பினராகவும், 1962 முதல் 1967 வரை மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும், 1963 முதல் 1964 வரை மதிப்பீட்டுக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். 1962 முதல் 1964 வரையிலும், 1967 ஆம் ஆண்டிலும் நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சி செயற்குழு உறுப்பினராகவும், 1967 முதல் 1970 வரை நான்காவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[6]

கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன், குழந்தைகளின் கல்வி, குழந்தைத் திருமணம், சாதி அமைப்பு போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பது போன்ற பல்வேறு சமூக நடவடிக்கைகளில் தேவி ஈடுபட்டார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கங்கா தேவி 21 சூன் 1941 அன்று ஜெய்பால் சிங்கை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். தோட்டக்கலை, வாசிப்பு மற்றும் சுற்றுப்பயணம், குறிப்பாகப் பின்தங்கியப் பகுதிக்கு பயணம் செய்வதை இவர் விரும்பினார். இவர் உத்தரப்பிரதேசத்தின் இலக்னோவில் வசித்து வந்தார்.[6]

இறப்பு[தொகு]

தேவி காசியாபாத்தில் 24 மே 1984 அன்று, தனது 67 வயதில் இறந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "5th Lok Sabha Members Bioprofile Ganga Devi". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "UTTAR PRADESH 17 - MOHANLALGANJ Parliamentary Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. Indian elections since independence. Election Archives. https://books.google.com/books?id=o0s5AQAAIAAJ. 
  4. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. 
  5. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. https://books.google.com/books?id=ZgQfAQAAMAAJ. பார்த்த நாள்: 4 Mar 2023. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  7. Lok Sabha Debates. https://books.google.com/books?id=FVwwAAAAMAAJ&q=%22Devi+passed+away+on+24+May,+1984+at%22. பார்த்த நாள்: 8 February 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]