ஒசாமா பின் லாடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن) |
|
|---|---|
| மார்ச் 10 1957 (வயது 52) | |
ஒசாமா பின் லேடன் |
|
| பிறந்த இடம் | ரியாத், சவூதி அரேபியா |
| பணி நாடு | முஜயிடீன் Maktab al-Khadamat அல் கைடா |
| சேவை ஆண்டு(கள்) | 1979 - தற்காலம் வரை |
| தரம் | Commander-in-chief |
| சமர்/போர்கள் | ஆப்கான் உள்நாட்டுப் போர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் |
ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லேடன் (அரபு மொழி: أسامة بن محمد بن عوض بن لادن, (பிறப்பு மார்ச் 10, 1957[1]) பொதுவாக ஒசாமா பின் லேடன் அல்லது உசாமா பின் லேடன் என் அறியப்படும் இவர் சவூதி அரேபியாவில் பிறந்த இசுலாமிய போராளியாவர். இவர் அல் கைடாவை தொடக்கியவராக கருதப்படுகிறார். [2] இவர் செல்வந்தக் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஏனைய இசுலாமிய போராளிகளுடன் சேர்ந்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளை வாபஸ் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் இராணுவத்தினரையும் கொலை செய்யுமாறு முஸ்லிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார். [3] [4]
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என் கூறப்படுகிறது. அவர் மொத்த 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா இவரது 10 வது மனைவி அமிதியா அல் அட்டாஸ் என்பவருக்கு ஒரே மகனாக பிறந்த்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.[5][6]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ "Wanted: Usama Bin Laden". Interpol. பார்க்கப்பட்ட நாள் 2006-05-15.
- ↑ Michael Scheuer, Through Our Enemies' Eyes, p. 110
- ↑ BIN LADEN'S FATWA
- ↑ "Online NewsHour: Al Qaeda's 1998 Fatwa". PBS. பார்க்கப்பட்ட நாள் 2006-08-21.
- ↑ Letter From Jedda, Young Osama, How he learned radicalism, and may have seen America, by Steve Coll, The New Yorker Fact, Issue of 2005-12-12, Posted 2005-12-05
- ↑ "Salon.com News - The making of Osama bin Laden". Salon.com. பார்க்கப்பட்ட நாள் 2006-08-21.