ஐம்பூதங்கள்
ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில் ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.