ஐந்தாக்சிசன் இருபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாக்சிசன் இருபுளோரைடு
Pentaoxygen difluoride
இனங்காட்டிகள்
12191-79-6 Y
InChI
  • InChI=1S/F2O5/c1-3-5-7-6-4-2
    Key: YDWQUFUNVRYGQP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • FOOOOOF
பண்புகள்
F2O5
வாய்ப்பாட்டு எடை 117.99 g·mol−1
தோற்றம் 90 கெல்வின் வெப்பநிலையில் செம்பழுப்பு நிற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐந்தாக்சிசன் இருபுளோரைடு (Pentaoxygen difluoride) என்பது O5F2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] புளோரினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அறியப்பட்டுள்ள ஆக்சிசன் புளோரைடுகளில் ஒன்றாகும். பெண்டா ஆக்சிசன் டைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

60 முதல் 77 கெல்வின் வரையிலான வெப்பத்தில் குறிப்பிட்ட மோலார் விகிதத்தின் F2—O2 வாயுக் கலவையின் மூலம் மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். வாயுக்களின் விகிதம் இங்கு 5:2 என கணிக்கப்பட்டுள்ளது.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

ஐந்தாக்சிசன் இருபுளோரைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகும். 90 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் செம்பழுப்பு நிற திரவம் போலவும், 77 கெல்வின் வெப்பநிலையில் ஓர் எண்ணெயாகவும் தெரிகிறது.[3]

77 கெல்வின் வெப்பநிலையில் ஐந்தாக்சிசன் இருபுளோரைடு நீர்ம நைட்ரசனில் கரையாது. ஆனால் நீர்ம ஆக்சிசன் மற்றும் மீத்தேனில் கரைகிறது. 65 கெல்வின் வெப்பநிலையில் இது OF2 திரவத்தில் கரைகிறது..[3]

மேற்கோள்கள்[தொகு]