எஸ். கே. சிவக்குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எஸ். கே. சிவக்குமார் | |
|---|---|
| பிறப்பிடம் | மைசூர், கர்நாடகம், இந்தியா |
| வாழிடம் | |
| தேசியம் | |
| துறை | விண்வெளித் தொலைத்தொடர்பு |
| பணி நிறுவனம் | இயக்குனர், இச்ரோ செயற்கைக்கோள் மையம் (ISAC), இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
| கல்வி கற்ற இடங்கள் | தொழில்நுட்ப இளநிலை மற்றும் அறிவியல் முதுநிலைப் பட்டங்கள் (இந்திய அறிவியல் கழகம்), பெங்களூரு |
| அறியப்படுவது | தொலை அளவியல் |
| விருதுகள் | மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநில நாள் விருது பெற்றவர் |
| மதம் | இந்து |
முனைவர். எஸ். கே. சிவ்குமார் (சிவக்குமார் என்றும் உச்சரிக்கப்படும்) இந்திய அறிவியலாளரும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனரும் ஆவார். இந்தியாவின் ஆளில்லா நிலவு துழாவுகை திட்டமான சந்திரயான்-1 செயலாக்கத்திற்குத் தேவையான தொலை அளவியல் கருவி அமைப்புக்களின் மேம்படுத்தல்களில் முதன்மை பங்காற்றினார். கர்நாடக மாநிலத்தின் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் இந்தியாவின் ஆழ் விண்வெளி தொலைத்தொடர்பின் தந்தை எனக் கருதப்படுகிறார். [1][2] [3]
விருது [தொகு]
- இஸ்ரோவில் முப்பத்திரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ள சிவக்குமாருக்கு கர்நாடக மாநில விருது 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The men behind the mission". NDTV. 2008-10-22. http://www.ndtv.com/convergence/ndtv/moonmission/Election_Story.aspx?id=NEWEN20080069746. Retrieved 2008-10-31.
- ↑ "The Chandrayaan Team". Zee News. http://www.zeenews.com/chandrayaan/story.aspx?aid=477110. Retrieved 2008-10-30.
- ↑ "Indian moon launch boosts Asian space race". UPI Asia.com. 2008-10-21. http://www.upiasia.com/Economics/2008/10/21/indian_moon_launch_boosts_asian_space_race/2168/. Retrieved 2008-10-31.