எம். வி. இராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வி. இராகவன்
பிறப்புஇராகவன்
(1933-05-05)5 மே 1933
கண்ணூர், மலபார் மாவட்டம், சென்னை மாகாணம் , பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு9 நவம்பர் 2014(2014-11-09) (அகவை 81)
அரசியல் கட்சிபொதுவுடைமை மார்க்சிசக் கட்சி
வாழ்க்கைத்
துணை
ஜானகி
பிள்ளைகள்கிரீஷ், இராஜேஷ், எம். வி. நிகேஷ் குமார், கிரிஜா

மேலத்து வீட்டில் இராகவன் (Melathu Veettil Raghavan) (5 மே 1933 - 9 நவம்பர் 2014) ஓர் மூத்த பொதுவுடைமைத் தலைவரும், இந்தியாவின் கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் பொதுவுடைமை மார்க்சிசக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி பங்காளியாக இருந்தார். பொதுவுடைமை மார்க்சிசக் கட்சி உருவாவதற்கு முன்பு இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிசம்) முக்கிய தலைவராக இருந்தார்.[2] [3]

இவர் கேரளாவின் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கண்ணூர் மாவட்டத்தில் நாட்டின் முதல் கூட்டுறவு துறை மருத்துவக் கல்லூரியான பரியராம் மருத்துவக் கல்லூரியை இராகவன் நிறுவினார். பாப்பினிசேரியில் மாநிலத்தில் முதல் 'நஞ்சு சிகிச்சை மையம்' (பாம்பு நஞ்சு அகற்றும் மையம்) கட்டிய முக்கிய நபராகவும் இருந்தார். தர்மசாலையில் ஒரு பாம்புப் பூங்கா அமைத்தது இவரது மற்றொரு முக்கிய சாதனையாகும். இது ஒரு பெரிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.[4]

சொந்த வாழ்க்கை[தொகு]

இராகவன், 5 மே 1933 அன்று கண்ணூரில் சங்கரன் நம்பியாருக்கு பிறந்தார்.[5] ஜானகி என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர், [6] இவரது மகன்களில் ஒருவரான எம். வி நிகேஷ் குமார், செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.[7]

இறப்பு[தொகு]

2005 முதல், இவர் மேம்பட்ட நடுக்குவாத நோயால் பாதிக்கப்படிருந்த இவர் 9 நவம்பர் 2014 அன்று தனது 81 வயதில் இறந்தார்.[8] [9] பையம்பலம் கடற்கரையிலுள்ள சுடுகாட்டில் சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை, ஏ. கே. கோபாலன், கே.ஜி. மாரார் எ. கி. நாயனார் ஆகியோரின் கல்லறைக்கு அருகே இவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minister for Co-operation". Kerala Legislative Assembly, Thiruvananthapuram. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.
  2. http://www.firstpost.com/politics/marxist-communist-party-founder-mv-raghavan-passes-away-1794239.html
  3. https://indianexpress.com/article/india/politics/m-v-raghavan-communist-leader-who-took-on-cpm-in-kerala-dead/
  4. "Archived copy". Archived from the original on 11 September 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-01-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 19 January 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. http://www.marunadanmalayali.com/index.php?page=newsDetail&id=29875
  7. "Writing with light" இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604104547/http://www.hindu.com/fr/2005/02/04/stories/2005020402070200.htm. 
  8. "എം വി രാഘവൻ അന്തരിച്ചു; യാത്രയായത് കേരളം കണ്ട ഏറ്റവും തന്റേടിയായ രാഷ്ട്രീയ നേതാവ്; അവ".
  9. "CMP leader M.V. Raghavan passes away". https://www.thehindu.com/news/national/kerala/cmp-leader-mv-raghavan-passes-away/article6580210.ece. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._இராகவன்&oldid=3708226" இலிருந்து மீள்விக்கப்பட்டது