இலண்டன்-கொல்கத்தா பேருந்து போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லண்டன்-கொல்கத்தா பேருந்துப் போக்குவரத்து (London–Calcutta bus service), ஐக்கிய ராஜியத்தின் தலைநகரான லண்டன் மாநகரத்தையும், இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும் இணைக்கும், உலகின் நீண்ட பேருந்து வழித்தடமாக கருதப்படுகிறது.[1][2][3] 1957இல் துவங்கப்பட்ட இந்த பேருந்து வழித்தடம், இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் துவங்கி, வடமேற்கு இந்தியா, பெல்ஜியம், யுகேஸ்லேவியா வழியாக லண்டன் நகரத்தை 50 நாட்களில் அடைகிறது.[4] இவ்வழித்தடம் 10,000 மைல்கள் (16,100 கிலோ மீட்டர்) நீளம் கொண்டது. 1976ஆம் ஆண்டு வரை இவ்வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கியது.[5] 1957 இல் ஒரு வழி பயணத்திற்கான பேருந்து செலவு £85 ஆகவும், 1973 இல் £145 ஆகவும் இருந்தது. இந்தத் தொகையில் உணவு, பயணம் மற்றும் தங்குமிடம் ஆகியவை அடங்கும்.[3]

வழித்தடம்[தொகு]

இலண்டன்-கொல்கத்தா பேருந்து சேவையை ஆல்பர்ட் டூர் டிராவல்ஸ் நிறுவனம் இயக்கியது.[6] இதன் முதல் பயணம் இலண்டனில் 15 ஏப்ரல் 1957 அன்று தொடங்கி, 5 சூன் 1957 அன்று கொல்கத்தாவில் 50 நாட்களில் முடிந்தது. ப்யணத்தின் போது பேருந்து பயணித்த நாடுகள்: இங்கிலாந்திலிருந்து பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக புது தில்லி, ஆக்ரா, அலகாபாத் மற்றும் வாரணாசி வழியாக கொல்கத்தாவை அடைந்தது.[5]

பேருந்தில் உள்ள வசதிகள்[தொகு]

இந்த பயணத்தில் வாசிப்பு வசதிகள், அனைவருக்கும் தனித்தனியாக தூங்கும் அறைகள் மற்றும் மின்விசிறியால் இயக்கப்படும் வெப்ப ஊட்டிகள் ஆகியவை இருந்தது. ஒரு சமையலறை இருந்தது. பேருந்து பயணம் என்பதை விட ஒரு சுற்றுலாப் பேருந்து போன்று இருந்தது. பேருந்தில் வானொலி மற்றும் விருந்துகளுக்கு இசை அமைப்பு வழங்கப்பட்டது. பனாரஸ் மற்றும் யமுனை ஆற்றங்கரையில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் செலவிட நேரம் கிடைத்தது. டெஹ்ரான், சால்ஸ்பர்க், காபூல், இஸ்தான்புல் மற்றும் வியன்னாவிலும் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது.[3][7]

பிற்கால வரலாறு[தொகு]

சில ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் ஆல்பர்ட் டூர்ஸ் எனும் சுற்றுலா நிறுவனம் அக்டோபர் 8, 1968 அன்று சிட்னியில் இருந்து இந்தியா வழியாக இலண்டனுக்கு பேருந்துப் பயணம் தொடங்கியது. பேருந்து இலண்டனை அடைய சுமார் 132 நாட்கள் ஆனது. மேலும் இது லண்டன்-கல்கத்தா-லண்டன் மற்றும் லண்டன்-கல்கத்தா-சிட்னி வழித்தடங்களில் இயக்கப்பட்டது.[8]

ஈரான் வழியாக இந்தியா வந்த பேருந்து பின்னர் பர்மா, தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக சிங்கப்பூர் சென்றது. சிங்கப்பூரில் இருந்து, பேருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்துக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக சிட்னிக்கு பயணித்தது.[9][10] The charge for this service from London to Calcutta was £145. The service had all the modern facilities as before. The bus service was discontinued in 1976 due to the problems in Iran and the escalation of tensions between Pakistan and India.[11] இலண்டனிலிருந்து கல்கத்தாவிற்கு இந்த சேவைக்கான கட்டணம் £145 ஆகும். சேவையில் முன்பு போலவே அனைத்து நவீன வசதிகளும் இருந்தன. 1976 இல் ஈரானில் ஏற்பட்ட உள் நாட்டுப் போர் காரணமாகவும் மற்றும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்ததன் காரணமாகவும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "This Was 'World's Longest Bus Route' From Kolkata To London". Curly Tales (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  2. "A Bus Ride From London to Kolkata in 1950s? Yes, The Viral Photo is Real". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  3. 3.0 3.1 3.2 (in en) Civic Affairs. P. C. Kapoor at the Citizen Press. 1957. https://books.google.com/books?id=x_wmAQAAIAAJ&pg=RA4-PA86. 
  4. "London Calcutta Bus Trip 1957 london India Editorial Stock Photo - Stock Image | Shutterstock". Shutterstock Editorial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  5. 5.0 5.1 "Samayam". malayalam.samayam.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "London to Calcutta by Road? Picture of 1950s Albert Travel Bus Service is Going Viral, Know Details About This Fascinating Historic Journey". Unique News Online (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  7. admin (2020-07-04). "ലണ്ടൻ – കൽക്കട്ട ബസ് റൂട്ട്". News Kerala online (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  8. Eat, Tech Travel (2020-07-03). "ലണ്ടനിൽ നിന്നും ഇന്ത്യയിലെ കൽക്കട്ടയിലേക്ക് ഒരു ബസ് സർവ്വീസ്". Technology & Travel Blog from India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
  9. "ലണ്ടനിൽ നിന്നു കൽക്കട്ടയിലെത്തിയ ഇന്ത്യാ മാന്..." ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
  10. INGALIS, LEONARD (1957-08-08). "London-Calcutta Bus is back in London - Owner drove passengers 20,300 Miles". The New York Times. 
  11. 11.0 11.1 K, Noushad K. "ലണ്ടൻ - കൽക്കട്ട ബസ്". Archived from the original on 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.