இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனத்துவேசம்
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

பா    தொ

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளை வான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] புள்ளி விபரங்கள்

1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்[1]. 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன[2]. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும் இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

[தொகு] யார் செய்கிறார்கள்?

இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துகள் நிழவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது[3]. ஆசிய மனிதவுரிமை ஆனையம் போன்ற அமைப்புகள் 1980 இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணமல் போதல் சம்பவங்களுக்கு இலங்கை அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.

[தொகு] அனைத்துலகச் சட்டத்தின் படி

அனைத்துலகச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்து அவரது கைதை மறுக்கும் போதும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்கும் போதும் பலவந்தமான காணாமல் போதல் இடம் பெறுகின்றது. காணாமல் போதலானது பொதுவாக சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலையை மேற்கொள்வதற்காகவே இடம் பெறுகின்றது.

[தொகு] காணாமல் போனோர் தொடர்பில்

இலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம் கடற்படை காவல்துறை ஆகியவற்றின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது.

இதில் சில சம்பவங்களில் சிறப்பு இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் சீருடை அணிந்த காவல்துறையினரும் குற்ற புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது[4].

[தொகு] ஆட்கடத்தல் தொடர்பான புகார்கள்

ஆள்கடத்தல்கள் தொடர்பாக முழுமையான விபரங்கள் சேகரிப்பது கடுமையானது. ஆள்கடத்தல்களை அரசு, அரசுடன் இணைந்து இயங்கும் அமைப்புகள், அல்லது பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்வதாக பயம் நிகழ்வாதால் இது தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்புக் குழுவிற்கு 265 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் 77 பேர் விடுவிக்கப்பட்டதுடன், கடத்தப்பட்டவர்களில் இம்சிக்கப்பட்டு தூர இடங்களில் கண்கள், கட்டப்பட்டு வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.

மேலும் 21 பேர் கடத்தப்பட்டு தற்போது பூசா முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய 165 பேர் தொடர்பாகத் தகவல் அறிய முடியாமல் உள்ளது.

2008 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் 2007 இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர்[5].

[தொகு] குறிப்பிட்ட நிகழ்வுகள்

  • ஆசிய மனிதவுரிமை ஆணையம் இரண்டு நபர்கள் காணாமல் போனது தொடர்பானத் தகவலைப் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் ஒருவர் 2008 பெப்ரவரி மாதமும் மற்றவர் மே மாதமும் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர் மாணவர். இந்த மாணவரை கடத்திச் செல்லப்பட்டதனை விவரிக்கையில் அந்த வாகனத்தினுள் (வெள்ளை வேன்) இருந்தவர்கள் இலங்கை பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது[6].
  • ஆசிய மனிதவுரிமை ஆணையம் வனத்தவில்வ எனும் இடத்தில் நான்கு பொலிஸார் ஒரு விவசாயியை 2008 பெப்ரவரி 28 ம் நாள் எடுத்துச் சென்றதாகவும் பின் குறிப்பிட்ட நபர் தொடர்பான எந்த தகவலும் இல்லை எனும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகின்றது[7].
  • ஆசிய மனிதவுரிமை ஆணையத்தால் விடப்பட்ட மற்றுமோர் அவசர அறிக்கையின் படி காணாமல் போனோர் மற்றும் கொல்லப் பட்டோர் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார்கள் தொடர்பில் பெயர், பால், பாதிப்புக்குற்பட்டவரின் முகவரி, வயது, நிகழ்ந்த நாள், மாவட்டம் மற்றும் முழு விபரங்களுடன் ஆசிய மனிதவுரிமை ஆணையம் இலங்கை அரசிடம் முறைப்பாடு செய்துள்ளது. அதில் மேலும் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரதும் ஆயுத து்ணைக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தின் மத்தியில் பாதிப்புக்குற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. [8].
  • இரண்டு வாகனங்களில் வந்த இனம் தெரியாதோர் குழுவினர் ஊடகவியலாளர் ஒருவரை கடத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு அயலவர்களின் குறுக்கீட்டால் அம் முயற்சி கைவிடப்பட்டது என்ற ஒரு முறைப்பாடும் ஆசிய மனிதவுரிமை ஆணையத்திடம் கிடைக்கப்பட்டுள்ளதை வெளியிட்டுள்ளது. [9]

[தொகு] மனிதவுரிமை பணியாளர்கள் காணாமல் போதல்கள்

இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழர் புணர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. [11] இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] குறிப்பு

ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னும் பல ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விபரங்களை ஆசிய மனிதவுரிமை ஆணைய அதிகார பூர்வத் தளத்தில் பார்வையிடலாம்.

இலங்கை அரசின் அறிவித்தலைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் மனிதவுரிமை அமைப்புகள் தமிழர் வாழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்காக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.

[தொகு] மேற்கோள்களும் ஆதாரங்களும்

  1. Report of the UN Working Group on Enforced or Involuntary Disappearances [1]
  2. Disappearances in Sri Lanka: 16,742 Cases Established, No Action Yet [2]
  3. கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்
  4. இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக
  5. கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவின் கூட்டம்
  6. Two persons disappear in separate incidents - ASIAN HUMAN RIGHTS COMMISSION
  7. Whereabouts of a man is unknown after arbitrary arrest - ASIAN HUMAN RIGHTS COMMISSION
  8. citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups
  9. Police allegedly attempt to abduct a journalist
  10. Two "white van" abductions within a few hours in Colombo
  11. Killing and disappearance of 57 humanitarian workers reported

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்