இலங்கைத் தமிழர் இனப்படுகொலை
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
|
|||||
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவேயாம்.
பொருளடக்கம் |
பின்புலம் [தொகு]
1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்த நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர்.
படுகொலைகள் [தொகு]
1958, 1977, 1983 இனக்கலவரங்கள் இவற்றில் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்தும் கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் மூலம் இதுவரை 100 000 கொல்லப்பட்டுள்ளார்கள்.
தமிழரை வெளியேற்றல் [தொகு]
இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்பது ஒரு நெடுங்கால திட்டமாக சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோர் 1950 களில் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்ட போர் உட்பட பல நடவிடிக்கைகள் 1.3 மில்லியன் தமிழர்களை வெளியேற்றி விட்டது. தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையேயும், கிழக்கிலங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கு இடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி விட்டுள்ளது.[3]
அடிமையாக்குதல் [தொகு]
எதிர்ப்புப் போராட்டங்கள் [தொகு]
தமிழர் படுகொலைகளை நியாப்படுத்தல் [தொகு]
குறிப்பிட்ட தமிழர்களின் புலிகளுக்கான ஆதரவு பயங்கரவாதத்தை விளைவிக்கின்றது என்றும், போரில் புலிகளை அழிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்றும் இலங்கை அரசத் தரப்பால் கூறப்படுகிறது. மேலும், புலிகள் பொது மக்களை கட்டாயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதனாலேயே பெருமளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரசை விட விடுதலைப் புலிகள் பெரும் தொகையான தமிழர்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்துள்ளார்கள் அதனால் அவர்களை எந்த முறையினாலும் அழிப்பது தவிர்க்கமுடியாது எனப்படுகிறது.
தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல் [தொகு]
போர் நடைப்பெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப் பட்டுள்ளது.[4][5] போரினால் அவலப்பட்டு வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்களம் மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்புக்கு செய்யப்படுகின்றது.
இவற்றையும் பாக்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ The hidden massacre: Sri Lanka’s final offensive against Tamil Tigers
- ↑ Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath'
- ↑ Drive them out of the country. Although 1.3 million have already been driven out, there are still 2 million left. [1]
- ↑ கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு
- ↑ பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம்
வெளி இணைப்புகள் [தொகு]
- முத்துக்கமலம் இணைய இதழில் "சுயநலத்திற்காக ஒரு இன அழிப்பு" நோர்வே நக்கீரா கட்டுரை
- Sri Lanka: Genocide of the Tamil minority
- Sri Lanka: Disregard for Civilian Safety Appalling - HRW
- http://www.haltgenocide.org/
- http://www.tamilidpcrisis.org/
- http://www.tamilsagainstgenocide.org/
- http://www.pearlaction.org/
- http://www.genocideintervention.net/educate/crisis/sri_lanka