சுப்பிரமணியம் சுகிர்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (டிசம்பர் 12, 1969 - சனவரி 24, 2006) இலங்கை ஊடகவியலாளர்.

ஊடகவியலாளராக வாழ்க்கை[தொகு]

திருகோணமலை நகரின் போர்ச் சூழலில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றா நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றிலும் பயின்றார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

படுகொலை[தொகு]

சுகிர்தராஜன் 2006 சனவரி 24 அன்று திருகோணமலை நகரில் வைத்து ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறவில்லை[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. [http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=330:2010-01-24-17-02-29&catid=51:2009-12-31-06-12-38&Itemid=109 பத்திரிகையாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள்]
  • சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 31 ஆம் நாள் நினைவுமலர்.