ஆய்னான் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்னான் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீட்சு
இனம்:
கை. பிளாட்டியூரசு
இருசொற் பெயரீடு
கைலோபீட்சு பிளாட்டியூரசு
(ஆலன், 1925)

ஆய்னான் பறக்கும் அணில் (Hainan flying squirrel)(கைலோபெட்டசு எலெக்டிலிசு) என்பது இசுகுரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது சீனாவில் உள்ள ஆய்னான் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]

இந்தோசீன பறக்கும் அணிலுடன் ஒத்ததாகக் கருதப்பட்ட ஆய்னான் பறக்கும் அணில் 2013ஆம் ஆண்டு ஆய்வில் தனித்தனி சிற்றினங்களாக வகைப்படுத்தப்பட்டன. இரண்டு சிற்றினங்களுக்கும் உடற்கூறியல் மற்றும் மரபணு வேறுபாடுகள் உள்ளன. மேலும் இவை ஒவ்வொன்றின் உடல் உரோம நிறத்தில் வேறுபாடுகள் உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் சமீபத்திய மரபணு வேறுபாட்டையும் இச்சிற்றினங்கள் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hylopetes electilis (G. M. Allen, 1925) - Hainan Flying Squirrel". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  2. Li, Song; Yu, Fa-Hong (2013-10-08). "Differentiation in cranial variables among six species of Hylopetes (Sciurinae:Pteromyini)" (in en). Zoological Research 34 (E5): 531120–E. doi:10.11813/j.issn.0254-5853.2013.E4-5.E120. பன்னாட்டுத் தர தொடர் எண்:2095-8137. http://www.zoores.ac.cn/en/article/doi/10.11813/j.issn.0254-5853.2013.E4-5.E120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்னான்_பறக்கும்_அணில்&oldid=3746477" இலிருந்து மீள்விக்கப்பட்டது