ஆதி சங்கரர்
| ஆதி சங்கரர் | |
|---|---|
சங்கரரும் சீடர்களும் - ராஜா ரவி வர்மாவின் ஓவியம் |
|
| இயற்பெயர் | சங்கர |
| தலைப்புகள்/விருதுகள் | அத்வைதம் நிறுவியவர்,இந்து மறுமலர்ச்சி, சண்மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர் |
| குரு | கோவிந்த பகவத்பாதர் |
| தத்துவம் | அத்வைத வேதாந்தம் |
| மேற்கோள் | ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம் ("வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்" போடுகிறான் மனிதன்) |
ஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.
இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.
வேதிய உபநிஷத்கள் மற்றும் பாதராயணர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் பிரயாணித்து தெற்கில் சிருங்கேரி, மேற்கில் துவாரகா, வடக்கில் பதரிநாத் மற்றும் கிழக்கில் பூரி என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.
பொருளடக்கம் |
காலம் [தொகு]
கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.
தத்துவம் [தொகு]
பார்பணீயத்தை நியாப்படுத்தும் கொள்கையை அளித்த வேதாநதத் தத்துவம். பொதுவாக உலக ஆன்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிறுக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்ததை தவிர வேறெந்த பொருளும் கிடையாது. உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கர்ரின் அத்வைதம்.
சமூக தாக்கம் [தொகு]
வர்த்தகத்திலும், கல்வியிலும் தலைசிறந்து விளங்கிய மாபெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய இந்தியா பின்னர் பின் தங்கியதற்கு ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. இவரது ஆன்மா, மற்றும் பிரம்மம் கருத்துக்கள் இந்திய விஞ்ஞான வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது. மேலும் நாலு வர்ண முறை வேர்விட்டு வளர காரணமாயிர்ந்தது.
துறவறம் [தொகு]
தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
மனீஷா பஞ்சகம் [தொகு]
தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற பொது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.
அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச் சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆன்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுவதாக சங்கர விஜயம் கூறுகின்றது.
உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு அத்வைத ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த சம்பவம் ஆகும்.
இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
ஆறு மதங்களாக புதிய உருக்கொடுத்தல் [தொகு]
தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.
அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.
வாதங்கள் [தொகு]
காபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.
கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர்.
இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]