அல் கசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல் கசாலி
இசுலாமிய பாரசீக அறிஞர்
மத்திய காலம் (இசுலாமியப் பொற்காலம்)
முழுப் பெயர் கசாலி (அல்கசெல்)
சிந்தனை
மரபு(கள்)
சூபியம், சுன்னி (சாபியர்), அசாரியர்
முக்கிய
ஆர்வங்கள்
சூபியம், இசுலாமிய இறையியல் (கலாம்), இசுலாமிய மெய்யியல், இசுலாமிய உளவியல், ஏரணம், இசுலாமியச் சட்டம், இசுலாமிய நீதிமுறை, அண்டவியல்

அபு அமிட் முகம்மத் இபின் முகம்மத் அல் கசாலி (1058-1111) என்னும் முழுப்பெயர் கொண்ட அல் கசாலி பாரசீகத்தின் கோராசான் மாகாணத்தைச் சேர்ந்த துசு என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஒரு இசுலாமிய இறையியலாளரும், நீதிச் சபையினரும், மெய்யியலாளரும், அண்டவியலாளரும், உளவியலாளரும் ஆவார். இவர் சுன்னி இசுலாமியச் சிந்தனை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார். இவர் ஐயுறவுக் கோட்பாட்டின் முன்னோடிகளுள் ஒருவர். இவர் எழுதிய மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்னும் நூலில், தொடக்ககால இசுலாமிய மெய்யியலில் பாதையையே மாற்றினார். பண்டைய கிரேக்க மற்றும் எலெனியச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த இசுலாமிய மீவியற்பியல் சார்ந்த மெய்யியலின் பாதையை, இறைவன் அல்லது தேவதைகளினால் தீர்மானிக்கப்படுகின்ற காரணத்தையும் விளைவையும் அடிப்படையாகக் கொண்ட இசுலாமிய மெய்யியல் நோக்கித் திருப்பினார்.

பயன்பாடு சாரா அறிவியல் பிரிவுகளை அல் கசாலி விமர்சித்தார். இது இசுலாமிய சூழலில் அறிவியல் வளர்ச்சியை நல்வுபடுத்தியதற்கு பங்களித்து.


குறிப்புகள்[தொகு]

  1. The Influence of Islamic Thought on Maimonides Stanford Encyclopedia of Philosophy, June 30 2005
  2. Muslim Philosophy, Islamic Contributions to Science & Math, netmuslims.com
"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்_கசாலி&oldid=1538297" இருந்து மீள்விக்கப்பட்டது