அலெக்சாண்டர் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் பாபு
பிறப்புஅலெக்சாண்டர் பாபு அருலந்து
18 திசம்பர் 1975 (1975-12-18) (அகவை 48)
அந்தவூரணி, இராமநாதபுரம், தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
பணிநகைச்சுவை நடிகன், இசையமைப்பாளர், இயக்குனர், வலையொளியாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014 - தற்போது வரை
அறியப்படுவதுஇந்திய மேடைச் சிரிப்புரை நகைச்சுவை கலைஞர், வலையொளியாளர்
வாழ்க்கைத்
துணை
சுமிதா
வலைத்தளம்
http://alexanderbabu.com/

அலெக்சாண்டர் பாபு அருலந்து ஓர் இந்திய மேடைச் சிரிப்புரை நகைச்சுவை கலைஞர். மேலும் இவர் ஓர் பாடகர், யோகா ஆசிரியர் மற்றும் நடிகர். இவரின் மேடை பெயரான அலெக்சாண்டர் பாபு அல்லது அலெக்ஸ் பாபு என்று அழைக்கப்படுகிறார். [1] [2]

2014 ஆம் ஆண்டில், அலெக்ஸாண்டர் பாபு தனது கார்ப்பரேட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, நகைச்சுவை மற்றும் நாடக நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். [3] இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய இராச்சியம், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். [4] [5] 2019 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமிற்காக தனது 120 நிமிட ஆங்கில-தமிழ் ஸ்டாண்ட்-அப்-மியூசிக் ஸ்பெஷலான அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டை தயாரித்தார் .

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அலெக்சாண்டர் பாபு ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் அந்தவூரணி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். [6] [7] இவர் சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் அங்கேயே மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். [8] இவர் அமெரிக்காவில் இருந்தபோது கர்நாடக பாடகராக தன்னை நிலைநிறுத்திட பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

அலெக்சாண்டர் பாபு தனது கார்ப்பரேட் வேலையை ஒரு மென்பொருள் பொறியாளராக விட்டுவிட்டு தனது ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைத் தொழிலைத் தொடங்கினார். [3] [9] ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக்கான தனது ஆரம்ப வாழ்க்கையின் போது, இவர் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட நகைச்சுவை இயக்கமான எவம் ஸ்டாண்ட்-அப் தமாஷாவில் பணியாற்றினார். ஜூலை 2017 இல், இசை, கதைசொல்லல் மற்றும் நகைசுவை நிகழ்ச்சியான அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடங்கினார். இந்த நிகாழ்ச்சியால் இவருக்கு ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றது. [10] இவர் அலெக்ஸ் இன் வொண்டர்லேண்டின் 115 நிகழ்ச்சிகளை 2019 ஆம் ஆண்டில் முடித்த பின்னர் அதை இப்போது ஒரு அமேசான் பிரைம் ஸ்பெஷலாக உள்ளது [11] இவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவரது வீடியோக்கள் இவருக்கு மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. மற்றும் ஏப்ரல் 2020 நிலவரப்படி 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் இவரது சேனல் கொண்டுள்ளது.

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2019 அடாடே
அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் அவரே தொலைக்காட்சி படம்
2020 மாரா திருடன்

வலைத் தொடர்[தொகு]

ஆண்டு நிரல் பெயர் பங்கு வலைப்பின்னல் குறிப்புகள்
2020 நேரம் என்னா பாஸ் சந்தோசம் அமேசான் பிரைம் [12]

பாடகர்[தொகு]

ஆண்டு படம் பாடல் குறிப்புகள்
2020 தாராள பிரபு "ராசா மாவன்"

குறிப்புகள்[தொகு]

  1. "BBC Asian Network - Ashanti Omkar, Alexander Babu Arulanthu". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  2. "The yogi act". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  3. 3.0 3.1 "Stand-up comedian Alexander Babu talks about using music as a tool of storytelling in his show, Alex in Wonderland". www.indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  4. "Alex in Wonderland". www.ticketmagic.me. Archived from the original on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  5. "Alexander Babu's Special 'Alex in Wonderland' Hits Amazon Prime Video on 23 August". Dead Ant (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  6. Suhasini, Lalitha. "Light music". Pune Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  7. "Alexander the Comic bring his first solo show to Coimbatore today!". www.indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  8. Alexander Babu (2019-06-14). "Alex in Crazy Land: Tribute to a comic genius". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  9. "Meet stand-up comedian Alexander Babu for an hour over Tamil films and music". mid-day (in ஆங்கிலம்). 2017-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  10. "Watch: Comedian Alexander Babu sings 'Mouna Raagam' classic in English". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  11. "Light music". Pune Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  12. "Time Enna Boss trailer: A fun Tamil series about time travel". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_பாபு&oldid=3783901" இலிருந்து மீள்விக்கப்பட்டது