அன்சாக் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்சாக் நாள்
Anzac Day
AWM Canberra Dawn 25APR05.jpg
2005, ஏப்ரல் 25: ஆஸ்திரேலிய போர் நினைவகத்தில் 90வது அன்சாக் நாள் நினைவுகூரல்
கடைபிடிப்போர் ஆஸ்திரேலியர்கள், நியூசிலாந்தர்கள்
வகை நாட்டுப்பற்று, வரலாற்று, தேசியம்
முக்கியத்துவம் துருக்கி, கலிப்பொலியில் தரையிறங்கிய முதல் நாள்
அனுசரிப்புகள் இராணுவ அணிவகுப்பு, நினைவுக் கூட்டங்கள், விடுமுறை நாள்
நாள் ஏப்ரல் 25


அன்சாக் நாள் (Anzac Day) அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 25ம் நாள் நினைவுகூரப்படுகிறது. 1915ஆம் ஆண்டில் இந்நாளில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியப் பேரரசின் துருக்கி மீதான கலிப்பொலி போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கியதை நினைவுகூரும் முகமாகவும், அப்போரின் போது பங்குபற்றிய மற்றும் இறந்த இராணுவத்தினரை நினைவுகூரவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்சாக் நாள் குக் தீவுகள், சமோவா மற்றும் தொங்கா ஆகிய நாடுகளிலும் அரச விடுமுறை நாளாகும்.

வரலாறு[தொகு]

அன்சாக் (ANZAC) என்பது Australian and New Zealand Army Corps என்பதன் சுருக்கமாகும். முதலாம் உலக யுத்தத்தின் போது கூட்டுப் படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடலுக்கு இலகுவாகச் செல்வதற்கு ஏதுவாக வழி அமைப்பதற்காக 1915ம் ஆண்டில் துருக்கியின் கலிப்பொலி என்ற இடத்திற்கு அவுஸ்திரேலிய, நியூசிலாந்துத் துருப்பினர் அனுப்பப்பட்டனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லைக் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. துருக்கிய இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி அவர்கள் கல்லிபொலியை ஏப்ரல் 25 இல் அடைந்தனர். ஆனாலும் இச்சண்டை எட்டு மாதங்கள் வரையில் நீடித்தது. 1915 இன் இறுதியில் இருபக்கங்களிலும் ஏற்பட்ட பலத்த சேதங்களின் பின்னர் கூட்டுப் படைகள் பின்வாங்கின. மொத்தம் 8,000 அவுஸ்திரேலிய, 2,700 நியூசிலாந்துப் படைகள் இச்சண்டையின்போது கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 25 நாள் 1916 ஆம் ஆண்டில் அன்சாக் நாள் என உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டது. அவ்வருட அனசாக் தினம் அவுஸ்திரேலியா எங்கும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. காயமுற்ற பல அவுஸ்திரேலியத் இராணுவத்தினர் சிட்னியில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 2,000க்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் லண்டன் வீதிகளில் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எகிப்தில் முகாமிட்டிருந்த அவுஸ்திரேலியர்கள் விளையாட்டு நாளாகக் கொண்டாடினர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்சாக்_நாள்&oldid=1754341" இருந்து மீள்விக்கப்பட்டது