சலௌகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலௌகன்
காஷ்மீரின் மன்னன்
அசோக கோனாந்தியன் ஆட்சி செய்த காஷ்மீர் பகுதியின் தோராயமான பரப்பளவு
துணைவர்ஈசான தேவி
அரசமரபுகோதார வம்சம்
தந்தைஅசோகன் (கோனாந்தியன்)]]
மதம்இந்து சமயம் அல்லது பௌத்தம்

சலௌகன் (Jalauka) சலுகன் என்றும் அழைக்கப்படும் இவர் இராஜதரங்கிணயில் குறிப்பிடப்பட்டுள்ள காஷ்மீரின் மன்னராவார். இவர் மலேச்சாக்களை பள்ளத்தாக்கிலிருந்து அகற்றினார். இவர் காஷ்மீரின் சுறுசுறுப்பானவரும் வீரம் மிக்க அரசராகவும் புகழ் பெற்றார். இவர் ஊடுருவிய சில வெளிநாட்டினரை வெளியேற்றினார். மேலும் கன்னோசி வரையிலான சமவெளிகளைக் கைப்பற்றினார். இந்துக் கடவுளான சிவனையும் பெண் தெய்வங்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்புடன் இருந்தார். இவரும் இவரது ராணியான ஈசானதேவியும் அடையாளம் காணக்கூடிய இடங்களில் பல கோயில்களை எழுப்பினர்.

வரலாற்றுத்தன்மை[தொகு]

சலௌகனின் கதை, நிலப்பரப்பு விவரங்கள் இருந்தபோதிலும், அடிப்படையில் பழம்பெருமை வாய்ந்தது. மேலும் காஷ்மீர் பாரம்பரியத்தின் சுயாதீனமான உறுதிப்படுத்தல் எதுவும் கண்டறியப்படவில்லை.

அசோகர் (கோனந்தியா) என்பவர் இவரது தந்தையும் முன்னோடியுமென இராஜதரங்கிணி குறிப்பிடுகிறது. அந்த உரையில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளின்படி, இந்த அசோகர் கிமு 2 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்திருப்பார். மேலும் கோதாரா என்பவரால் நிறுவப்பட்ட ஒரு வம்சத்தின் உறுப்பினராக இருந்தார். இந்த மன்னர் அருகதரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாகவும், தனது மகன் சலௌகனைப் பெற்றெடுக்க பூதேசுவரனிடம் ( சிவன் ) வேண்டிக்கொண்டதாகவும் கல்கணர் கூறுகிறார். இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், கல்கணர் கூறும் அசோகரை பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட மௌரியப் பேரரசர் அசோகருடன் பல அறிஞர்கள் அடையாளம் காண்கின்றனர். [1] [2] ரொமிலா தாப்பர் சலௌகனை மௌரிய இளவரசர் குணாளனுடன் சமன் செய்கிறார். "சலௌகன்" என்பது பிராமி எழுத்தில் உள்ள எழுத்துப்பிழை என்று வாதிடுகிறார். [3]

சான்றுகள்[தொகு]

  1. Guruge 1994, ப. 185-186.
  2. Lahiri 2015, ப. 378-380.
  3. Guruge 1994.

உசாத்துணை[தொகு]

  • Guruge, Ananda (1994). "King Aśoka and Buddhism: historical and literary studies". In Nuradha Seneviratna (ed.). King Asoka and Buddhism: Historical and Literary Studies. Buddhist Publication Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-24-0065-0.
  • Lahiri, Nayanjot (2015). Ashoka in Ancient India. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674057777.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலௌகன்&oldid=3393297" இலிருந்து மீள்விக்கப்பட்டது