ரூமிலா தாப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரூமிலா தாப்பர்

ரூமிலா தாப்பர் (Romila Thapar, பி. 1931) ஒரு இந்திய வரலாற்றியலாளர்; பண்டைய இந்தியா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.

பணி[தொகு]

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் ஏ. எல். பாஷம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றை போதிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • 'அசோகர் மற்றும் மௌரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, '
  • 'பண்டைய இந்திய சமூக வரலாறும்: சில திரிபுகளும்,'
  • 'பண்டைய இந்தியா மீதான தற்கால பார்வை மற்றும் '
  • 'பண்டைய இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை.'

விருதுகள்[தொகு]

1992இல் இந்திய ஆரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தனக்கு வேண்டாமென புறக்கணித்தார். குடியரசுத் தலைவரிடம், இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாரக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசாங்க விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரூமிலா_தாப்பர்&oldid=1359763" இருந்து மீள்விக்கப்பட்டது