ஹர்ஷநாத் கோயில்
ஹர்ஷநாத் கோயில் | |
---|---|
ராஜஸ்தான் மாநிலத்தில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ராஜஸ்தான் |
மாவட்டம்: | சிகர் |
அமைவு: | ஹர்ஷநாத் |
ஏற்றம்: | 900 m (2,953 அடி) |
ஆள்கூறுகள்: | 27°30′00″N 75°10′21″E / 27.499914°N 75.172443°E |
கோயில் தகவல்கள் |
ஹர்ஷநாத் கோயில் ( Harshnath Temple ) என்பது இந்திய மாநிலமான இராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். இது மாவட்டத் தலைமையகமான சிகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
[தொகு]சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலில் காணப்பட்ட பொ.ச.973 தேதியிட்ட கல்வெட்டின் படி, சாகம்பரி மன்னர் இரண்டாம் விக்ரகராஜாவின் ஆட்சியின் போது, துறவியான பவரக்தன் என்பவரால் கட்டப்பட்டது. இப்போது இது இடிபாடுகளில் கிடக்கும் பல்வேறு கோயில்களால் சூழப்பட்டுள்ளது.[2]
அசல் கோயில் பின்னர் 1679 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்டது. 1718-ஆம் ஆண்டில் ராவ் சிவசிங் பழைய கோவிலின் இடிபாடுகளைப் பயன்படுத்தி பழைய கோவிலை ஒட்டி புதிய கோவிலைக் கட்டினார்.
இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாராவின் ஹர்ஷ் கிராமத்தில் ( ஹர்ஷ் தேவல் கோயில்) போன்றவற்றிலும் இதே மாதிரியான கோயில் அமைந்துள்ளது. பிலாராவில் உள்ள ஹர்ஷ் தேவல் கோயிலும் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கட்டிடக்கலை
[தொகு]கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிவாலயங்களும் தற்போது சிதிலமடைந்துள்ளன. பிரதான கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. அதன் தூண்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. உட்புற மேற்குச் சுவரில் பார்வதி [ 'விகட' என்று பெயரிடப்பட்ட] அவரது பெண் உதவியாளர்களுடன் பஞ்சங்கநிதபத்தில் நிற்கும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.[2]
-
ஏக-தந்தி வீணையை வாசிக்கும்]] இசைக்கலைஞரின் சிற்பம்.
-
ஏக-தந்தி வீணை, புல்லாங்குழல் மற்றும் மேளம் வாசிக்கும் இசைக்கலைஞர்களின் சிற்பம்
-
இசைக்கலைஞர்கள், ஒரு உதவியாளர் உட்கார்ந்திருக்கும் உருவம், ஒருவேளை ஒரு பிரபுவாக இருக்கலாம்
-
இசைக்கலைஞர்கள் மற்றும் ஒரு இணையைக் காட்டும் சிற்பம்
மேலும் பார்க்கவும்
[தொகு]- சகமானர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஹர்சத் மாதா கோயில்
சான்றுகள்
[தொகு]- ↑ "Districts of Rajasthan, Sikar District". www.rajasthandirect.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
- ↑ 2.0 2.1 "Archaeological Survey of India, Jaipur circle". Archaeological survey of India. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் ஹர்ஷநாத் கோயில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.