ஹர்ஷநாத் கோயில்

ஆள்கூறுகள்: 27°30′00″N 75°10′21″E / 27.499914°N 75.172443°E / 27.499914; 75.172443
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்ஷநாத் கோயில்
ஹர்ஷநாத் கோயில் is located in இராசத்தான்
ஹர்ஷநாத் கோயில்

ராஜஸ்தான் மாநிலத்தில் கோயிலின் அமைவிடம்
ஹர்ஷநாத் கோயில் is located in இந்தியா
ஹர்ஷநாத் கோயில்
ஹர்ஷநாத் கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ராஜஸ்தான்
மாவட்டம்:சிகர்
அமைவு:ஹர்ஷநாத்
ஏற்றம்:900 m (2,953 அடி)
ஆள்கூறுகள்:27°30′00″N 75°10′21″E / 27.499914°N 75.172443°E / 27.499914; 75.172443
கோயில் தகவல்கள்

ஹர்ஷநாத் கோயில் ( Harshnath Temple ) என்பது இந்திய மாநிலமான இராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். இது மாவட்டத் தலைமையகமான சிகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலில் காணப்பட்ட பொ.ச.973 தேதியிட்ட கல்வெட்டின் படி, சாகம்பரி மன்னர் இரண்டாம் விக்ரகராஜாவின் ஆட்சியின் போது, துறவியான பவரக்தன் என்பவரால் கட்டப்பட்டது. இப்போது இது இடிபாடுகளில் கிடக்கும் பல்வேறு கோயில்களால் சூழப்பட்டுள்ளது.[2]

அசல் கோயில் பின்னர் 1679 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்டது. 1718-ஆம் ஆண்டில் ராவ் சிவசிங் பழைய கோவிலின் இடிபாடுகளைப் பயன்படுத்தி பழைய கோவிலை ஒட்டி புதிய கோவிலைக் கட்டினார்.

இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாராவின் ஹர்ஷ் கிராமத்தில் ( ஹர்ஷ் தேவல் கோயில்) போன்றவற்றிலும் இதே மாதிரியான கோயில் அமைந்துள்ளது. பிலாராவில் உள்ள ஹர்ஷ் தேவல் கோயிலும் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கட்டிடக்கலை[தொகு]

கோயிலும் அதைச் சுற்றியுள்ள சிவாலயங்களும் தற்போது சிதிலமடைந்துள்ளன. பிரதான கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. அதன் தூண்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. உட்புற மேற்குச் சுவரில் பார்வதி [ 'விகட' என்று பெயரிடப்பட்ட] அவரது பெண் உதவியாளர்களுடன் பஞ்சங்கநிதபத்தில் நிற்கும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Districts of Rajasthan, Sikar District". www.rajasthandirect.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  2. 2.0 2.1 "Archaeological Survey of India, Jaipur circle". Archaeological survey of India. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷநாத்_கோயில்&oldid=3802756" இலிருந்து மீள்விக்கப்பட்டது