ஸ்ரீசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீசங்கர் (இறப்பு: 20 சனவரி 1980) இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர். மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[1]

யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீசங்கரின் இயற்பெயர் வி. வைத்திலிங்கம். தேயிலைப் பரிசோதகராகப் பணியாற்றியவர்.[1] இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார்.[2]

அந்தனி ஜீவாவின் முள்ளில் ரோஜா நாடகத்தில் முதல் தடவையாக நடித்தார்.[1] பின்னர் பல மேடை நாடகங்களில் நடித்தார். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார்.[2] கொள்ளைக்காரன் நாடகத்தை மேடையேற்றிய போது பெரும் நட்டம் அடைந்தார்.[1]

பட்டங்கள்[தொகு]

கலையரசு சொர்ணலிங்கம் இவருக்கு "கலைவேந்தன்" என்ற பட்டத்தை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கிக் கௌரவித்தார்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 நாடகத்திற்காகத் தொழிலை விட்டவர் நடிகர் ஸ்ரீசங்கர், வீரகேசரி, 17 திசம்பர் 2011
  2. 2.0 2.1 தம்பிஐயா தேவதாஸ். "இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை". பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசங்கர்&oldid=3683907" இலிருந்து மீள்விக்கப்பட்டது