உள்ளடக்கத்துக்குச் செல்

ஷாஹபாத் மார்க்கண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷாஹபாத் மார்க்கண்டா என்னும் நகரம், இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ளது. இது மார்கண்டா ஆற்றின் இடது கரையில், அம்பலா பாசறைக்கு தெற்கே 20 கிமீ (12 மைல்) மற்றும் வரலாற்று நகரமான குருச்சேத்திரத்திலிருந்து 22 கிமீ (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. நகரத்தின் மற்ற பெயர்கள் ஷாஹாபாத், ஷாபாத் அல்லது ஷாபாத் என்பனவாகும்.[1]

புவியியல்

[தொகு]

ஷாஹாபாத் அம்பாலாவிலிருந்து தெற்கே 21 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று கிராண்ட் டிரங்க் சாலையின் அம்பாலா - டெல்லி பிரிவில் அல்லது ஜிடி சாலையில் உள்நாட்டில் அறியப்படுகிறது. இது குருக்ஷேத்திரத்தின் வடக்கே சுமார் 22 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. ஷாஹாபாத் தேசிய நெடுஞ்சாலை என்.எச் -1 இல் உள்ளது, மேலும் இது டெல்லி - அம்பாலா பாதையில் ஒரு புகையிரத நிலையத்தையும் கொண்டுள்ளது. இது காகரின் துணை நதியான மார்க்கண்டா நதி / நீரோடை கரையில் அமைந்துள்ளது. மேலும் இது பண்டைய வேத சரஸ்வதி நதி படுகை அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆற்றின் கரையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, இது புகழ்பெற்ற மகரிஷி மார்க்கண்டேயாவின் பெயரினால் மார்க்கண்டேயா மந்திர் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்ச்குலாவிலிருந்து, ராம்கர் மற்றும் டோசர்கா வழியாக ஷாஹாபாத் அருகே ஒரு சாலை உள்ளது. லாத்வா மற்றும் ராடூர் மற்றும் ஷாஹாபாத்திலிருந்து யமுனா நகருக்கு நேரடி சாலைகள் உள்ளன. குருக்ஷேத்ராவுக்கு அருகிலுள்ள பிப்லி, நிலோகேரி மற்றும் கர்னல் ஆகியவை கிரஹண்ட் ட்ரங்க் சாலையில் ஷாஹாபாத்திற்கு தெற்கே உள்ள மற்ற நகரங்கள் ஆகும்.

கல்சானா கிராமம் ஷாஹாபாத்திலிருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் ஹரியானாவுக்கு பெருமையை அளிக்கின்றனர். அதே போல் காபா குடும்பத்தில் பொது மேலாளர், எஸ்.டி.ஓ, எஸ்.டி.எம்., டி.டி.ஓ மற்றும் உயர் பதவிகளில் உள்ள பலர் உள்ளனர்.

பொருளாதாரம்

[தொகு]

விவசாய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான குறிப்பிடத்தக்க சந்தை இதுவாகும். ஷாஹாபாத்தில் உள்ள சந்தை முற்றத்தில் ஒரு பெரிய கொள்முதல் சந்தை அல்லது மண்டி உள்ளது. ஆற்றங்கரையில் இருக்கும் பகுதி வளமான பகுதி நெல் மற்றும் கோதுமை மற்றும் காய்கறிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்பும் இந்த நகரத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவுகிறது. மகசூலும் மிக அதிகமாக உள்ளது. மேலும் உயர் தரமான தானியங்களை எடுக்க ஏராளமான ஆலைகள் காணப்படுகின்றன. ஷாஹாபாத்தில் அரசு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.

புள்ளி விபரங்கள்

[தொகு]

ஷாஹாபாத் நகரம் 17 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2011 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி ஷாஹாபாத் நகராட்சி குழுவில் 55,411 மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 28,913 ஆண்கள், 26,694 பெண்கள் உள்ளனர்.[2]

0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4349 ஆகும். இது ஷாபாத் (எம்.சி) மொத்த மக்கள் தொகையில் 10.21% ஆகும். ஷாபாத் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 83.77% ஆகும். மாநிலத்தின் சராசரி கல்வியறிவு விகிதத்தை விட ஷாபாத்தில் கல்வியறிவு விகிதம் அதிகம் ஆகும். ஆண்களின் கல்வியறிவு 87.11% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 89.93% ஆகவும் உள்ளது.

ஷாஹாபாத் நகராட்சி குழு நிர்வாகத்தில் 9,222 வீடுகளுக்கு மேல் உள்ளது. இது தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது. நகராட்சி குழு வரம்புகளுக்குள் சாலைகள் அமைப்பதற்கும் அதன் அதிகார எல்லைக்குள் வரும் சொத்துக்களுக்கு வரி விதிப்பதற்கும் இது அங்கீகாரம் அளிக்கிறது.

கல்வி

[தொகு]

அரசுப் பள்ளி 1897 ஆண்டில் இல் நிறுவப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் ஆர்யா புத்ரி குருகுல் பள்ளியும் 1916 ஆம் ஆண்டில் டி.ஏ.வி பள்ளியும் நிறுவப்பட்டது. இஸ்லாமியா பள்ளி கானேவால் கல்சா பள்ளியாக மாற்றப்பட்டது. சில தனியார் பள்ளிகளும் இங்கு நிறுவப்பட்டன. ராம்துத் கா பள்ளி, பிரின்ஸ் கோச்சிங் கல்லூரி பிரபலமாக சர்தார் கா பள்ளி (1950–2000) என அழைக்கப்படுகிறது. குருஜி மாஸ்டர் தேசிய பள்ளி தீரத் சிங் கா பள்ளி இங்குள்ள கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

மக்கள்

[தொகு]

இங்கு வாழும் மக்கள் அரியான்வி மொழியில் பேசுகின்றனர்.

அரசியல்

[தொகு]

இந்த நகரம் ஷாஹ்பாத் சட்டமன்றத் தொகுதிக்கும், குருசேத்திர மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shahbad (MC)(800370)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Shahbad Municipal Committee City Population Census 2011-2019 | Haryana". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஹபாத்_மார்க்கண்டா&oldid=4117962" இலிருந்து மீள்விக்கப்பட்டது