வித்தியா சரண் சுக்லா
வித்தியா சரண் சுக்லா | |
---|---|
இந்திய அரசின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 21 நவம்பர் 1990 – 20 பிப்ரவரி 1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
முன்னையவர் | ஐ. கே. குஜரால் |
பின்னவர் | மாதவசிங் சோலான்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஆகஸ்டு 1929 ராய்ப்பூர், சத்தீஸ்கர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 சூன் 2013 மேதாந்த் மெடிசிட்டி, குர்காவுன், அரியானா | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு ஜனதா தளம்[1] ஜன் மோர்ச்சா |
வித்தியா சரண் சுக்லா அல்லது வி. சி. சுக்லா (Vidya Charan Shukla) (பிறப்பு: 2 ஆகஸ்டு 1929 – இறப்பு: 11 சூன் 2013) 60 ஆண்டு கால இந்திய அரசியல்வாதியும், இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். நெருக்கடி நிலை காலத்தில் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.
அரசியல்
[தொகு]1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில் மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுக்லா தொடர்ந்து ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]
1966-இல் இந்திரா காந்தி அமைத்த முதல் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் 1966 முதல் 1977 முடிய ராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] ராஜிவ் காந்தியின் அமைச்சரவையிலும் பணியாற்றிய[3] சுக்லா, பின்னர் ராஜிவ் காந்திக்கு எதிராக 1980ஆம் ஆண்டின் நடுவில் அருண் நேரு, வி. பி. சிங் மற்றும் ஆரீப் முகமது கான் ஆகிய தலைவர்களுடன் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி ஜன் மோர்ச்சா எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.[3] 1989-1990களில் வி. பி. சிங் அமைச்சரவையிலும், 1990-91களில் சந்திரசேகர் அமைச்சரவையிலும் அமைச்சராக பதவியில் இருந்தார்.[3] 9ஆவது மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் காங்கிரசு கட்சியில் இணைந்து 1991- 1996 இல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] பின்னர் 2003-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரசு கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராக இருந்தவர்.[4] 2003-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மகாசமுந்து நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குப் போட்டியிட்டு காங்கிரசு கட்சியின் வேட்பாளர் அஜித் ஜோகியிடம் தோற்றார். 2004-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி [3] 2007-இல் மீண்டும் சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து கொண்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Members of 9th Lok Sabha from Madhya Pradesh". loksabha.nic.in. மக்களவை (இந்தியா)/National Informatics Centre, New Delhi. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 May 2013.
- ↑ 2.0 2.1 2.2 "President Mukherjee condoles Vidya Charan Shukla's demise". Yahoo.news. 11 June 2013. http://in.news.yahoo.com/president-mukherjee-condoles-vidya-charan-shuklas-demise-144414577.html. பார்த்த நாள்: 19 June 2013.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "VC Shukla to rejoin Congress". hinudustan times. 21 September 2007 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120418004608/http://www.hindustantimes.com/News-Feed/India/VC-Shukla-to-rejoin-Congress/Article1-249072.aspx. பார்த்த நாள்: 23 June 2013.
- ↑ "V C Shukla to head NCP's Chhattisgarh unit". Rediff.com. 11 April 2003. http://www.rediff.com/news/report/ncp/20030411.htm. பார்த்த நாள்: 23 June 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1929 பிறப்புகள்
- 2013 இறப்புகள்
- 2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
- 3வது மக்களவை உறுப்பினர்கள்
- 4வது மக்களவை உறுப்பினர்கள்
- 5வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்