உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு அரைக்கோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் மேற்கு அரைக்கோளம், மஞ்சளில் காட்டப்பட்டுள்ளது.
மேற்கு அரைக்கோளம்

மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere), என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும்.[1] இது குறிப்பாக அமெரிக்காக்கள் (அல்லது பதிய உலகம்) மற்றும் அவற்றை அடுத்துள்ள நீர்பரப்பினைக் குறிக்கும். இந்த அரைக்கோளத்தில் உள்ள ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா மற்றும் ஆசியா பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன.இக்காரணங்களால் சிலநேரங்களில் அமெரிக்க அரைக்கோளம் எனவும் குறிப்பிடப்படும்.[2] அரசியல்சார் புவியியலில் சிலநேரங்களில், அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்டமேற்கு அரைக்கோளம் மேற்கு உலகம் எனவும் அறியப்படுகிறது.

நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு, மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு உருசியாவின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது.[2][3] இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் நீக்கப்படுகின்றன. கூடுதலாக வடகிழக்கு கிரீன்லாந்தின் சிறுபகுதி நீக்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.

அண்டார்டிக்காவின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. மேற்கு அரைக்கோளத்தில் உள்ளது மேற்கு அண்டார்டிகா என வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Latitude and longitude பரணிடப்பட்டது 2008-06-09 at the வந்தவழி இயந்திரம்" பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2006. Chicago: Encyclopædia Britannica, Inc.
  2. 2.0 2.1 Olson, Judy M. "Projecting the hemisphere", ch. 4 from Matching the map projection to the need; Robinson, Arthur H. & Snyder, John P., eds. 1997. Bethesda, MD: Cartography and Geographic Information Society, American Congress on Surveying and Mapping.
  3. "Eastern Hemisphere". Merriam-Webster's Geographical Dictionary, 3rd ed. 2001. Springfield, MA: Merriam-Webster, Inc., p. 340.

பிற பக்கங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_அரைக்கோளம்&oldid=3255638" இலிருந்து மீள்விக்கப்பட்டது