முப்பீனைல்மெத்தில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பீனைல்மெத்தில் குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
[குளோரோ-டை(பீனைல்)மெத்தில்]பென்சீன்
வேறு பெயர்கள்
1,1',1"-(குளோரோமீத்தேன்முத்தைல்)முப்பென்சீன்
இனங்காட்டிகள்
76-83-5 N
ChemSpider 17344583 Y
InChI
  • InChI=1S/C19H15Cl.C10H10.C8H8/c20-19(16-10-4-1-5-11-16,17-12-6-2-7-13-17)18-14-8-3-9-15-18;1-3-9-5-7-10(4-2)8-6-9;1-2-8-6-4-3-5-7-8/h1-15H;3-8H,1-2H2;2-7H,1H2 Y
    Key: TXMWQDFQVWGFTQ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6456
  • C1=CC=C(C=C1)C(C2=CC=CC=C2)(C3=CC=CC=C3)Cl
பண்புகள்
C19H15Cl
வாய்ப்பாட்டு எடை 278.7754 கி/மோல்
தோற்றம் வெண்மையும் மஞ்சளும் கலந்த திண்மம்
அடர்த்தி 1.141கி/செ.மீ3
உருகுநிலை 109 முதல் 112
கொதிநிலை 230 செ ( 20 இல் மி.மீ.பாதரசம்) மற்றும் 374.3 °செ (இல் 760 மி.மீ.பாதரசம்)
கரைதிறன் குளோரோஃபார்ம், பென்சீன், அசிட்டோன் [1] ஈதர்,எக்சேன் [2] ஆகியனவற்றில் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Corvine Chemicals MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 177.9 செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

முப்பீனைல்மெத்தில் குளோரைடு அல்லது முத்தைல் குளோரைடு(Triphenylmethyl chloride or trityl chloride) என்பது C19H15Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். வெண்மைநிறத் திண்மமான இவ்வால்கைல் ஆலைடை ஆங்கிலத்தில் TrCl என்று சுருக்கக் குறியிட்டு அழைப்பார்கள். சில சமயங்களில் முத்தைல் பாதுகாப்பு குழுவை ஒரு சேர்மத்தில் புகுத்துவதற்காகவும் இதைப் பயன்படுத்துவார்கள்.

தயாரிப்பு[தொகு]

வணிகரீதியாகவும் முப்பீனைல்மெத்தில் குளோரைடு விற்பனைக்குக் கிடைக்கிறது. முப்பீனைல்மெத்தனாலுடன் அசிட்டைல் குளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்து,. அல்லது பென்சீனுடன் கார்பன் நாற்குளோரைடைச் சேர்த்து முத்தைல் குளோரைடு – அலுமினியம் குளோரைடு கூட்டுவிளைபொருளை முதலில் உருவாக்கி பின்னர் அதை நீராற்பகுக்கும்[3] பிரைடல் கிராப்ட் ஆல்கைலேற்ற வினையின் மூலமாக முப்பீனைல்மெத்தில் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

வினைகள்[தொகு]

புரோட்டான் தராக் கரைப்பான் ஒன்றில் கரைக்கப்பட்ட முப்பீனைல்மெத்தில் குளோரைடு மற்றும் சோடியத்தில் இருந்து முப்பீனைல்மெத்தில்சோடியத்தைத் தயாரிக்கமுடியும்:[4]

(C6H5)3CCl + 2 Na → (C6H5)3CNa + NaCl

வெள்ளி அறுபுளோரோபாசுப்பேட்டுடன், முப்பீனைல்மெத்தில் குளோரைடு வினைபுரிந்து முப்பீனைல்மெத்தில் அறுபுளோரோபாசுப்பேட்டைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sciencelab.com/msds.php?msdsId=9925340
  2. http://www.scbt.com/datasheet-258321-trityl-chloride.html
  3. W. E. Bachmann; C. R. Hauser; Boyd E. Hudson, Jr. (1955). "Triphenylchloromethane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0841. ; Collective Volume, vol. 3, p. 841
  4. W. B. Renfrow Jr and C. R. Hauser (1943). "Triphenylmethylsodium". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0607. ; Collective Volume, vol. 2, p. 607

இவற்றையும் காண்க[தொகு]