அசிட்டைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டைல் குளொரைடு[1]
Skeletal formula of acetyl chloride
Skeletal formula of acetyl chloride
Ball-and-stick model of acetyl chloride
Ball-and-stick model of acetyl chloride
Space-filling model of acetyl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசிட்டைல் குளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தனைல் குளோரைடு
இனங்காட்டிகள்
75-36-5 Y
ChEBI CHEBI:37580 Y
ChemSpider 6127 Y
InChI
  • InChI=1S/C2H3ClO/c1-2(3)4/h1H3 Y
    Key: WETWJCDKMRHUPV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H3ClO/c1-2(3)4/h1H3
    Key: WETWJCDKMRHUPV-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் AO6390000
SMILES
  • ClC(=O)C
UNII QD15RNO45K Y
பண்புகள்
CH3COCl
வாய்ப்பாட்டு எடை 78.49 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.104 கி/மிலீ, நீர்மம்
உருகுநிலை −112 °C (−170 °F; 161 K)
கொதிநிலை 52 °C (126 °F; 325 K)
நீருடன் தாக்கமடைகிறது
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.45 D
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு சுடருடன் எரியக்கூடியது (F)
அரிக்கும் தன்மை கொண்டது (C)
R-சொற்றொடர்கள் R11 R14 R34
S-சொற்றொடர்கள் (S1/2) S9 S16 S26 S45
தீப்பற்றும் வெப்பநிலை 4 °C (39 °F; 277 K)
வெடிபொருள் வரம்புகள் 7.3–19%
தொடர்புடைய சேர்மங்கள்
அசைல் குளோரைடுகள்
தொடர்புடையவை
புரோப்பியோனைல் குளொரைடு
பியூடைரைல் குளொரைடு
தொடர்புடைய சேர்மங்கள் அசிட்டிக் அமிலம்
அசிட்டிக் நீரிலி
அசிட்டைல் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அசிட்டைல் குளோரைடு (Acetyl chloride) என்பது CH3COCl என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு அமிலக் குளோரைடு ஆகும். அசிட்டிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட வழிப்பொருளான இக்குளோரைடு கரிமச் சேர்மங்களில் அசைல் ஆலைடுகள் என்ற பிரிவைச் சார்ந்ததாகும். அசிட்டைல் குளோரைடு நிறமற்றது. மேலும் இது ஆவியாகக் கூடிய, நெடியுடைய அரிப்புத்தன்மை கொண்ட நீர்மமுமாகும்.

தொகுப்பு முறை[தொகு]

அசிட்டிக் நீரிலி, ஐதரசன் குளோரைடுடன் வினைபுரிந்து அசிட்டிக் அமிலத்துடன் கலந்த அசிட்டைல் குளோரைடை உற்பத்தி செய்கிறது.[2]

(CH3CO)2O + HCl → CH3COCl + CH3CO2H

ஆய்வக வழிமுறை[தொகு]

ஆய்வகத்தில் அசிட்டிக் அமிலத்துடன் PCl3, PCl5, SOCl2 போன்ற குளோரோநீர்நீக்கிகளை வினைப்படுத்தினால் அசிட்டைல் குளோரைடு எளிதாக உருவாகிறது. ஆனாலும் இவ்வாறு தயாரிக்கப்படும் அசிட்டைல் குளோரைடில் பாசுபரசு மற்றும் கந்தக மாசுக்கள் கலந்துள்ளன. இம்மாசுக்கள் கரிம வேதிவினைகளில் தலையிட்டு இடையூறு செய்கின்றன.[3] வினையில் உற்பத்தியாகும் அசிட்டைல் குளோரைடை டைமெத்திலனிலின் உடன்சேர்த்து வாலை வடித்தல் மூலமாக அல்லது கலவைக்குள் ஆர்கான் வாயு ஓட்டம் செலுத்தி காற்று நீக்கம் மூலமாக HCl அசுத்தங்களை நீக்கலாம்.

பிற முறைகள்[தொகு]

டைகுளோரோ அசிட்டிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் கலந்த கலவையை சூடாக்கும் போதும் அசிட்டைல் குளோரைடு உருவாகிறது.[3] மேலும் மெத்தில் குளோரைடை வினையூக்கி முன்னிலையில் கார்பனைலாக்கம் செய்தும் தொகுப்பு முறையில் அசிட்டைல் குளோரைடை தயாரிக்கலாம்[4].

தோற்றம்[தொகு]

அசிட்டைல் குளோரைடு இயற்கையில் தனித்துக் கிடைக்குமென்று எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், இது தண்ணீரில் இருக்க நேர்ந்தால் நீராற்பகுப்புக்கு உட்பட்டு ஐதரசன் குளோரைடு மற்றும் அசிட்டிக் அமிலமாக மாறிவிடுகிறது. உண்மையில் திறந்த வெளியில் இதைக் கையாளும்போதே காற்றில் உள்ள ஈரத்துடன் கலந்து நீராற்பகுப்புக்கு உள்ளாகி வெண்ணிற புகையாகி வெளியேறுகிறது. நீராற்பகுப்பின் விளைப் பொருட்களான ஐதரோகுளோரிக் அமிலம், மற்றும் அசிட்டின் அமிலத் துளிகளின் கலவையே மேற்கண்ட புகையாகும்.

பயன்கள்[தொகு]

அசிட்டைல் குளோரைடு அசிட்டைலேற்றம் செய்யும் காரணியாக விளங்குகிறது. அதாவது, ஓர் அசிட்டைல் தொகுதியை அறிமுகப்படுத்தும் காரணியாக இது விளங்குகிறது. அசிட்டைல் தொகுதி என்பது C(=O)-CH3 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்டிருக்கும். அசிட்டைல் குளோரைடு முக்கியமான ஒரு கரிம வினைபொருளாக பயன்படுகிறது. அசிட்டிக் நீரிலி தயாரிக்க பயனாகிறது. ஆல்ககால் மற்றும் அமினோத் தொகுதிகளை கண்டறியப் பயன்படுகிறது. எசுத்தர் ஆக்கலும், பிரீடல்-கிராப்ட்சு வினையும் அசிட்டைலேற்றத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளாகும்.

அசிட்டிக் அமில எஸ்டர்கள் மற்றும் அமைடுகள்[தொகு]

எசுத்தர்கள் மற்றும் அசிட்டிக் அமில அமைடுகள் தயாரிப்பில் அசிட்டைல் குளோரைடு ஒரு காராணியாக விளங்குகிறது. மேலும் ஆல்ககால்கள் மற்றும் அமைன்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. அசிட்டைலேற்றத்தின் ஒரு முக்கியப் பிரிவு எசுத்தராக்குதல் ஆகும்.

CH3COCl + HO-CH2-CH3CH3-COO-CH2-CH3 + H-Cl

அசிட்டைலேற்றம் பெரும்பாலும் பிரிடின், டிரையெத்திலமைன், அல்லது 4-டைமெத்தில்அமினோபிரிடின் (DMAP) ஆகிய காரங்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. இவை வினையூக்கிகளாகவும் வினையில் உருவாகும் ஐதரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கம் செய்யவும் உதவுகின்றன. இவ்வினைகள் பெரும்பாலும் கீட்டீன் வழியாக விளை பொருட்களாகின்றன.

பிரீடல் கிராப்ட்சு அசிட்டைலேற்றம்[தொகு]

அசிட்டைலேற்றத்தின் இரண்டாவது பிரதான வினைகள் பிரீடல்-கிராப்ட்சு வினைகளாகும்.[5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 79.
  2. Hosea Cheung, Robin S. Tanke, G. Paul Torrence “Acetic Acid” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a01_045
  3. 3.0 3.1 Leo A. Paquette (2005). "Acetyl chloride". Handbook of Reagents for Organic Synthesis, Activating Agents and Protective Groups. John Wiley & Sons. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-97927-2. 
  4. US 4352761 
  5. Charles Merritt, Jr and Charles E. Braun "9-Acetylanthracene" Org. Synth. 1950, 30, 1. எஆசு:10.15227/orgsyn.030.0001
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டைல்_குளோரைடு&oldid=2700111" இலிருந்து மீள்விக்கப்பட்டது