முகேசு பத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் முகேசு பத்ரா
Dr Mukesh Batra
பிறப்பு1 சூலை 1951 (1951-07-01) (அகவை 72)
மும்பை, இந்தியா
பணிஓமியோபதி மருத்துவர்
வலைத்தளம்
http://www.drbatras.com/ & http://www.drbatras.ae/

முகேசு பத்ரா (Mukesh Batra) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓமியோபதி மருத்துவர் மற்றும் பத்ரா குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தில் 6 ஓமியோபதி மருத்துவமனைகள் ஆறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. [1] மும்பை மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் முகேசு பத்ரா பிறந்தார். இவரது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவர் பத்ரா என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓமியோபதி மருத்துவம் பற்றிய புத்தகங்களையும் டைம்சு ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் சுகாதாரம் பற்றிய பல கட்டுரைகளையும் பத்ரா எழுதியுள்ளார்.[2] நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை ஓமியோபதி மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு பத்ராவுக்கு வழங்கி சிறப்பித்தது[3][4] ஓமியோபதி மருத்துவத்தில் சுகாதார சிக்கல்களை குணப்படுத்தும் தரப்படுத்ததல் முறைகளை கொண்டுவர நவீன தொழில்நுட்பத்தை இவர் பயன்படுத்தினார். எனவே இந்தியாவில் நவீன ஓமியோபதி மருத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[5] உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். மேலும் ஓமியோபதி மருத்துவத்தில் தோலில் சுட்டு கொப்புளம் உருவாக்கி ஓமியோபதி மருந்துகளை நிரப்பும் முறையை பத்ரா அறிமுகப்படுத்தினார்.[6] [7]

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் முகேசு 4.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் நிகழ்நேரத்தின் வழியாக ஆலோசனை வழங்கிய முதல் இணையவழி மருத்துவர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்தில் இட்டம்பெற்றுள்ளார்.[8] முகேசு மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியிலும் பின்னர் ஜெய் இந்து கல்லூரியிலும் படித்தார்.[9] தனது 60 ஆவது வயதில், ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறையில் சிறந்த நடைமுறைகள் சார்ந்த மேலாண்மை படிப்பில் சேர்ந்தார். மேலும் 2001 ஆம் ஆண்டில் முகேசுவின் நேர்மறை சுகாதார அறக்கட்டளையை நிறுவினார். இந்த நிறுவனம் சமூகத்திற்கு பெருமளவில் பயனளித்தது.[10][11]

கல்வி மற்றும் வாழ்க்கை[தொகு]

1972 ஆம் ஆண்டு சந்தபன் மோகன்பாய் படேல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஓமியோவதி மருத்துவத்தில் முகேசு பட்டம் பெற்றார்.[12]இவர் மொரிசியசு, மசுகத் மற்றும் இலண்டன் போன்ற நகரங்களில் ஓமியோபதி மருத்துவத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மொரிசியசு நகரில் ஓமியோபதி மருத்துவ முறையை சட்டமாக்குவதில் பெரும் பணியாற்றினார். மேலும் முகேசின் மருத்துவமனை இந்தியாவின் முதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு நாடுகளில் போதையூட்டும் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நாடுகளில் ஓமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தினார்.[13]

2018 ஆம் ஆண்டில் மரபணு மற்றும் ஓமியோபதியின் கலவையான மரபு ஓமியோபதி என்ற புதிய சிகிச்சை முறையை முகேசு அறிமுகப்படுத்தினார்.[14]

இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஓமியோபதி மருத்துவமனைகளை ஆரம்பித்துவைத்தார். துபாய் நகரில் துபாய் உடல்நலம் பேணும் ஓமியோபதி மருத்துமனைகளையும் அதைத் தொடர்ந்து சுமேரா லேக் டவரில் மற்றொரு மருத்துவமனையையும் ஆரம்பித்தார். மேலும் துபாய் நகரில் மட்டும் அல்லாது பிற நகரங்களான அபுதாபி, இலண்டன், டாக்கா போன்ற நகரங்களில் மருத்துவமனையைத் தொடங்கினார்.[15][16]

மக்கள் சேவை[தொகு]

மருத்துவர் முகேசின் நிறுவனம் நோய் மற்றும் இயலாமைக்கு எதிராக போராடும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் பாத்ராவின் நேர்மறை சுகாதார விருதுகளை வழங்கி அதற்கு நிதியுதவி செய்துவருகிறது. மேலும் தனது வருடாந்திர புகைப்பட கண்காட்சியின் வருமானத்தை மேற்கண்ட நோக்கங்களுக்காக இவர் நன்கொடை அளித்து வருகிறார். பிறகு ஓமியோபதி மருத்துவத்திற்காக இந்தியா முழுவதும் 160 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இலவச மருத்துவமனைகளை அமைத்துள்ளார். [17] பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சையை அளித்தார். [18]அவற்றில் சில நிறுவனங்களான பார்வையற்றோருக்கான விக்டோரியா நினைவுப் பள்ளி, செப்பர்ட் விதவைகள் இல்லம், மெர்சி முதியோர் இல்லம், ஐதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் அமைந்துள்ள முதியோர்களுக்கான சந்தியா இல்லம், ஏக் பிரயாசு மற்றும் கர்த்தார் ஆசுரா இல்லம் போன்ற அமைப்புகள் பாத்ராவின் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டுகின்றன.[19]

விருதுகளும் மற்றும் பாராட்டுகளும்[தொகு]

உலக வணிக கத்தோலிக்க அதிகாரக் குழுவின் சார்பாக 2016 ஆம் ஆண்டின் சுகாதாரத் துறையின் சிறந்த நபர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. ref name=":1" />

உலக மருத்துவக் கழகம் 2014 ஆம் ஆண்டிற்கான ஓமியோபதி மருத்துவத்தில் இவர் செய்த சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழாங்கியது. [20]

முதலாவது சேக் சயீத் சர்வதேச விருது 2020 ஆம் ஆண்டிற்காக இவருக்கு வழங்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd". https://www.indiainfoline.com/article/news-sector-others/dr-mukesh-batra-founder-cmd-dr-batras-positive-health-clinic-pvt-ltd-113111401291_1.html. 
  2. "Dr Mukesh Batra wins Salute Mumbai Award". https://timesofindia.indiatimes.com/pune-times/Dr-Mukesh-Batra-wins-Salute-Mumbai-Award/articleshow/10502513.cms. 
  3. India, Press Trust of (2019-04-24). "Dr Batra's Launches its 10th International Clinic in Abu Dhabi". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/dr-batra-s-launches-its-10th-international-clinic-in-abu-dhabi-119042400958_1.html. 
  4. 4.0 4.1 "Dr. Mukesh Batra felicitated for his outstanding service in the field of homeopathy". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  5. "Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd". beta.indiainfoline.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-01-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  6. "Dr Mukesh Batra felicitated for his Contribution in the Field of Homeopathy". MediCircle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  7. "The White Swan". thewhiteswanawards.in. Archived from the original on 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  8. "Dr. Mukesh Batra's Charity Photo Exhibition at Kalakriti Art Gallery, Hyderabad - Exclusive Photo Coverage". www.ragalahari.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  9. "CEO Lifestyle". ceolifestylemagazine.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "'I enrolled at Harvard at the age of 60'". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  11. "Choosing homeopathy in 1973 was a tough career decision, says Dr Mukesh Batra". The Economic Times. 2016-07-01. https://economictimes.indiatimes.com/magazines/panache/choosing-homeopathy-in-1973-was-a-tough-career-decision-says-dr-mukesh-batra/articleshow/53000346.cms?from=mdr. 
  12. "Dr Batras Customer Care Number, Reviews of Dr Batras Customer Care Number, Complaints of Dr Batras Customer Care Number". Grotal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  13. "Dr Batra's have launched a new genetics-based therapy that predicts future diseases". www.gulftoday.ae. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  14. www.ETHealthworld.com. "For the first time in the world, we are using homeopathy for genetics: Dr. Mukesh Batra - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  15. "How I got here: Dr Mukesh Batra, founder of Batra's Homeopathic Clinic". Gulf Business (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
  16. "Dr Mukesh Batra awarded lifetime achievement award". https://timesofindia.indiatimes.com/business/india-business/Dr-Mukesh-Batra-awarded-lifetime-achievement-award/articleshow/35680343.cms. 
  17. "Dr Batra's Positive Health Awards honours the indomitable spirit of exemplary citizens". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-12-17. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  18. "Dr Batra's to open 50 homoeopathy clinics by March". The Economic Times. 2014-08-24. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/dr-batras-to-open-50-homoeopathy-clinics-by-march/articleshow/40857295.cms. 
  19. India, Press Trust of (2019-04-04). "Dr Batra's Homeopathy Clinics Across the World to Treat 10,000 Patients Free on 'World Homeopathy Day'". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/dr-batra-s-homeopathy-clinics-across-the-world-to-treat-10-000-patients-free-on-world-homeopathy-day-119040400350_1.html. 
  20. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேசு_பத்ரா&oldid=3591190" இலிருந்து மீள்விக்கப்பட்டது