மனித விலாக் கூடு
விலாக்கூடு | |
---|---|
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | cavea thoracis |
MeSH | D000070602 |
TA98 | A02.3.04.001 |
TA2 | 1096 |
FMA | 7480 |
உடற்கூற்றியல் |
விலாக்கூடு (rib cage) அனைத்து முதுகெலும்பிகளின் (விலக்கு:லேம்ப்ரே எனப்படும் மஞ்சள் புழு) மார்பு பகுதி எலும்புகளின் கட்டமைப்பாகும். முள்ளந்தண்டு நிரல், விலா எலும்புகள், மார்புப் பட்டை யெலும்புகளால் உருவாகியுள்ள இந்த விலாக்கூட்டினுள் இதயமும் நுரையீரல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களில், விலாக்கூடு, அல்லது மார்புக் கூடு (thoracic cage), எலும்புகளாலும் குருத்தெலும்புகளாலும் ஆனது; இது நெஞ்சுக் குழியைச் சூழ்ந்துள்ளது. மார்பு வளையத்தைத் (தோள் வளையம்) தாங்கி மனித எலும்புக் கூட்டின் கருவப் பகுதியாக விளங்குகின்றது. வழக்கமாக மனித விலாக்கூட்டில் 24 விலா எலும்புகளும் மார்புப் பட்டையெலும்பும் விலாக்கசியிழையமும் 12 மார்பு முள்ளெலும்புகளும் உள்ளன. தொடர்புடைய தசைநார்ப்பட்டை மற்றும் தசைகளுடன் தோலும் இணைந்த விலாக்கூடு மார்புச் சுவர் ஆகின்றது; இந்த மார்புச் சுவருடன் கழுத்து, மார்பகம், வயிற்றின் மேற்பாகம், முதுகு ஆகியவற்றின் தசைகள் இணைக்கப்பட்டுள்ளன.