மஞ்சள்கால் காடை
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மஞ்சள் கால் காடை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மஞ்சள்கால் காடை | |
---|---|
Female is on left, male on right | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. tanki
|
இருசொற் பெயரீடு | |
Turnix tanki Blyth, 1843 |
மஞ்சள் கால் காடை (Yellow-legged Buttonquail) இவை காடை வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள கருங்காடை (Buttonquail) இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக இந்தியத் துணைக்கண்டம், மற்றும் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.
பெயர்கள்
[தொகு]ஆங்கிலப்பெயர் :Yellow-legged-Buttonquail
அறிவியல் பெயர் :Turnix tanki
உடலமைப்பு
[தொகு]15 செ.மீ. - கருஞ்சாம்பல் நிறம் தோய்ந்த பழுப்பு நிற உடலில் கருப்புப் பட்டைக்கோடுகளும் நெளிகோடுகளும் காணப்படும். தொண்டையும் மோவாயும் வெண்மை. மார்பும், வயிறும் வெளிர் மஞ்சள், வயிற்றின் பக்கங்களில் கருப்புக் கறைகள் தென்படும். கால்கள் மஞ்சள். பெண் உருவில் சற்றுப் பெரியது. ஆரஞ்சுச் சிவப்புப் பட்டை பெண்ணின் கழுத்தில் காணப்படும் கால்கள் பளிச்சென்ற மஞ்சள் நிறம் கொண்டவை.
காணப்படும் பகுதிகள்
[தொகு]தமிழகம் எங்கும் பரவலாக சமவெளிகளிலும் மலைகளிலும் ஆண்டு முழுவதும் காணலாம். எனினும் பருவத்திற்கேற்ப இடம் பெயரும் பழக்கம் கொண்டது. தனித்தும் இணையாகவும் சிறு குழுவாகவும் காணலாம்.
உணவு
[தொகு]பழுத்து உதிர்ந்த இலைகளைக் காலால் புரட்டி புழு பூச்சிகளை இரையாகத் தேடித் தின்பதோடு தானியங்கள். சிறுகனி வகைகள் ஆகியவற்றையும் தின்னும்.
இனப்பெருக்கம்
[தொகு]தரையில் புல்லிடையே 4 முட்டைகள் இடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Turnix tanki". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ வட்டமிடும் கழுகு -ச.முகமது அலி தடாகம் வெளியீடு
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:35