மங்கல்வேதா
மங்கல்வேதா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 17°31′00″N 75°28′00″E / 17.51667°N 75.46667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தாலுகா | மங்கல்வேதா |
அரசு | |
• வகை | நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,824 |
மொழி | |
• அலுவல் மொழி | மராத்திய மொழி |
• உள்ளூர் | கன்னடம் |
வட்டார மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413305 |
வாகனப் பதிவு | MH-13 |
மங்கல்வேதா (Mangalwedha), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்வேதா தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வைணவ ஆச்சாரியரான ஜெயதீர்த்தர் பிறந்த ஊர் ஆகும். இந்நகரத்தில் கன்னட மொழி அதிகம் பேசப்படுகிறது. இது சோலாப்பூருக்கு தென்கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 4,420 வீடுகளும் 17 வார்டுகளும் கொண்ட மங்கல்வேதா நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 21,824 ஆகும். அதில் ஆண்கள் 11,109 மற்றும் பெண்கள் 11,109 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 965 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.50% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 88.82% ஆகவுள்ளது. இந்நகரத்தில் இந்துக்கள் 84.88%, இசுலாமியர் 12.99%, பௌத்தர்கள் 1.40%, சமணர்கள் 0.52% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[1]