உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜனபாதங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனபாதங்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
ஜனபாதங்கள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

[தொகு]

@Kanags: வணக்கம். இக்கட்டுரையின் பெயர் "Jana (people) + Pada (foot) = Janapadas" என்று ஆங்கில விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Pada (foot) என்பது தமிழில் பாதம் என்றே வருகிறது. இதன் தலைப்பை "ஜனபாதங்கள்" என்று மாற்றலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 14:31, 16 சனவரி 2023 (UTC)[பதிலளி]

@சுப. இராஜசேகர்: ஓம், வழிமாற்றை நீக்காமல் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:39, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]
பதம் என்பதற்குப் பாதம் என்றும் பொருளுண்டு போல் தெரிகிறது? அவ்வாறெனின், மாற்றத்தேவையில்லை. அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:08, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]
பதம் என்ற சொல்லுக்கு சொல், எடுத்துக் காட்டு, மாறாத தன்மை என்ற பொருள்களே உள்ளன. பாதம் என்ற பொருள் இல்லை. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:11, 19 சனவரி 2023 (UTC)[பதிலளி]
ஜனபதம் என்பதே சரியான சொல். CXPathi (பேச்சு) 04:15, 25 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
ஜனபதம் என்ற சொல்லில் பதம் என்ற சொல் foot என்னும் பொருளில் கால் என்று பயிலவில்லை. Foothold என்னும் பொருளில் கால் ஊன்றிய நிலம், தாய் நிலம், வேர் நிலம் என்ற பொருளில் தான் பயின்று வந்துள்ளது. பதம் என்னும் சொல்லுக்கு இடம், நிலம் ஆகிய பொருட்களும் உள்ளன. ஆக, கங்கைக் கரையில் இருந்த சிறு சிறு நாடுகளைக் குறிக்கும் ஜனபதம் என்னும் சொல்லில் நிலம் என்னும் பொருளே வராத பாதம் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மேலும் சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது.
முதலாவதாக, Foothold க்கும் foot க்கும் வேறுபாடு தெரியாதது பெரிய விஷயம் இல்லை. ஆனால் பதம் என்னும் சொல்லுக்கு பாதம் என்னும் பொருள் இல்லை என்று இந்த விவாதத்தில் ஆதாரம் எதுவும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வையாபுரி பிள்ளையின் பேரகராதியில் பதம் என்னும் சொல்லுக்கு முதல் பொருளே பாதம் என்றுதான் அளிக்கப்பட்டுள்ளது. (நிலம் என்னும் பொருள்கூட எட்டாவதாகவே அளிக்கப்பட்டுள்ளது) பதம் எனில் கால் என்பதற்கு எடுத்துக்காட்டாக புறநானூறில் இருந்து 'எறிபதத்தா னிடங்காட்ட' என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல்படியே foothold ஐ foot என எடுத்துக் கொண்டாலும் இரண்டாயிரம் வருடங்களாக தமிழில் வழங்கி வரும் சொற்பொருளை எப்படி இல்லை எனக் கொள்ள முடியும்? அக்கூற்றை ஏற்கும் முன்பு ஒருமுறை அகராதியில் ஒருமுறை சரிபார்த்திருக்கப்பட வேண்டாமா?
இரண்டாவதாக, ஜனபாதம் என்று எழுத வேண்டும் என்று மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆங்கில கட்டுரையில் அருகிலேயே தேவநாகரி லிபியில் ஜனபதம் என்றே அச்சொல் எழுதப்பட்டுள்ளது. ஜனபாதம் என்று அல்ல. சமஸ்கிருதத்தை தமிழில் எழுதப் புகும் எந்த மரபிலும் பதத்தை பாதம் என்று எழுதுவதில்லை, அதுவும் இரண்டு சொற்களுக்கு இடையில் பொருள் வேறுபாடு நிற்கும்போது. பொதுத்தமிழில் பெரும்பாலும் நடைமுறையில் இல்லாத, தனித்தமிழ் ஆர்வலர்களால் விக்கிபீடியாவில்கூட சீராக நடைமுறையில் கொண்டுவர முடியாத சிதைந்தன வரினும் இயைந்தன வாரா போன்ற பழைய இலக்கணவிதிகளின் படியே கூடவும் சனபதம் என்றே எழுதவேண்டுமே தவிர ஜனபாதம் என்று அல்ல.
இறுதியாக, ஜனபதம் என்றே தமிழ்நாட்டு பாடநூல்கள் முதல் அனைத்து வரலாற்று நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஒரு துறையின் கலைச்சொல்லை அத்துறையின் அறிஞர்கள் பயன்படுத்தும்வாறே பொதுவில் எழுத வேண்டும் — சிலசமயங்களில் நேர் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் பொதுப் பயன்பாட்டிற்கும் மாறானதாக இருந்தாலும் என்பதே பொது நடைமுறை.
ஆக, தமிழ்ப் பிழை, ஆங்கிலப் பிழை, சமஸ்கிருதப் பிழை, கலைச்சொல் புரிதலின்மை ஆகிய நான்கு பிழைகளால் தாங்கப்படும் ஜனபாதம் என்னும் சொல்லை மீண்டும் ஜனபதம் என்றே மாற்றக் கோருகிறேன். நன்றி. CXPathi (பேச்சு) 04:22, 25 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
சொற்குவை இணைய தளத்தில் பதம் என்ற சொல்லுக்கு சொல், எடுத்துக் காட்டு, மாறாத தன்மை என்ற பொருள்கள் இருந்ததால் மேலே அவ்வாறு குறிப்பிடப்பட்டது. தவறு எனில் தலைப்பை மாற்றி விடுங்கள். சுப. இராஜசேகர் (பேச்சு) 06:47, 25 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
அண்ணா உங்கள் நன்னோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் சமயங்களில் விக்கிப்பீடியாவில் பிழைகள் இருக்கக்கூடாது என்னும் உயரிய நோக்கமே எவ்வாறு பிழைகளுக்கு வழியமைக்கிறது என்பதை மட்டும் அடிக்கோடிட விரும்புகிறேன். அப்போது எழுதும் போதிருந்த உணர்வுகளால், மேலே உள்ள எதிர்வினை கொஞ்சம் கடுமையானதாக இப்போது தொனிக்கிறது. அந்த தொனிக்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - CXPathi (பேச்சு)
விக்கிப்பீடியா என்பது கூட்டு முயற்சி தான். தவறுகளைத் திருத்தும் போது தான் கட்டுரையின் தரம் மேம்படும். நமக்குள் மன்னிப்பெல்லாம் தேவையில்லை.--சுப. இராஜசேகர் (பேச்சு) 10:37, 25 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜனபாதங்கள்&oldid=4126672" இலிருந்து மீள்விக்கப்பட்டது