பெராக்சோகார்பனேட்டு
வேதியியலில் பெராக்சோகார்பனேட்டு (peroxocarbonate) என்பது இரண்டை இணைதிறனாகக் கொண்டு CO42− என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு எதிர்மின்னயனி ஆகும். இந்த ஆக்சோகார்பன் அயனியில் தனி கார்பன் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையின்படி இவ்வயனி பெராக்சோகார்பானிக் அமிலத்தின் (HO–CO–O–OH-) எதிர்மின் அயனியாகும்[1][2].
உருகிய இலித்தியம் கார்பனேட்டை மின்னாற்பகுக்கும் போது எதிர் மின்வாயியில் பெராக்சோயிருகார்பனேட்டுடன் (C2O62−) பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனி உண்டாகிறது.[3] செறிவு மிகுந்த ஐதரசன் பெராக்சைடில் (H2O2) −10 °C வெப்பநிலையில் கார்பனீராக்சைடுடன் (CO2) இலித்தியம் ஐதராக்சைடை சேர்த்து இலித்தியம் பெராக்சோகார்பனேட்டு தயாரிக்க முடியும்.[4]
கரிமச் சேர்மங்களில் ஆக்சிசனால் நிகழும் ஆக்சிசனேற்ற வினைகளில், கார்பன் ஈராக்சைடின் தாக்கத்தை விளக்க பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனி ஒரு இடைநிலையாக முன்மொழியப்படுகிறது.[5]
இணைதிறன் ஒன்று பெற்றுள்ள ஐதரசன்பெராக்சோகார்பனேட்டு எதிர்மின் அயனிகளின் (H-O-O-CO2−) பொட்டாசியம் மற்றும் ருபீடியம் உப்புகளும் உருவாகின்றன.[6][7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ E. H. Riesenfeld, B. Reinhold (1909), Die Existenz echter Percarbonate und ihre Unterscheidung von Carbonaten mit Krystall-Wasserstoffsuperoxyd. Berichte der deutschen chemischen Gesellschaft, 42(4), 4377–4383, எஆசு:10.1002/cber.19090420428.
- ↑ E. H. Riesenfeld, W. Mau (1911): Isomere Percarbonate. Berichte der deutschen chemischen Gesellschaft, 44(3), 3595–3605, எஆசு:10.1002/cber.191104403244
- ↑ Li-Jiang Chen, Chang-Jian Lin, Juan Zuo, Ling-Chun Song, and Chao-Ming Huang (2004), First Spectroscopic Observation of Peroxocarbonate/ Peroxodicarbonate in MoltenCarbonate. J. Physical Chemistry B, volume 108, 7553-7556
- ↑ T. P. Firsova, V. I. Kvlividze, A. N. Molodkina and T. G. Morozova (1975), Synthesis and some properties of lithium peroxocarbonate. Russian Chemical Bulletin, Volume 24, Number 6, pp. 1318-1319; எஆசு:10.1007/BF00922073
- ↑ Sang-Eon Park, Jin S. Yoo (2004), New CO2 chemistry: Recent advances in utilizing CO2 as an oxidant and current understanding on its role. Studies in Surface Science and Catalysis, volume 153, pp. 303–314.
- ↑ Mimoza Gjikaj (2001), Darstellung und strukturelle Charakterisierung neuer Alkali- bzw. Erdalkalimetallperoxide, -hydrogenperoxide, -peroxocarbonate und -peroxohydrate பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம். Doctoral Thesis, University of Köln. 115 pages.
- ↑ Arnold Adam and Mathias Mehta (1998), KH(O2)CO2.H2O2 : EIN SAUERSTOFFREICHES SALZ DER MONOPEROXOKOHLENSAURE[தொடர்பிழந்த இணைப்பு]. Angew. Chem. volume 110 p. 1457. Cited by Gjikaj.
- ↑ M. Mehta and A. Adam (1998), Z. Kristallogr., Suppl. Issue 15 p. 53. Cited by Gjikaj.
- ↑ M. Mehta and A. Adam (1998), Z. Kristallogr., Suppl. Issue 15 p. 46. Cited by Gjikaj.