பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- நல்லூர்
- ஆலங்கேணி
- கொல்லக்குறிச்சி
- செட்டியக்குறிச்சி
- ஞானிமடம்
- மட்டுவில்நாடு
- பள்ளிக்குடா
- பரமன்கிரி
- கௌதாரிமுனை
- ஜயபுரம்
- கரியாலைநாகபடுவான்
- பல்லவராயன்கட்டு
- முழங்காவில்
- நாச்சிக்குடா
- கிராஞ்சி
- பொன்னாவெளி
- இரணைதீவு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும், மேற்கில் மன்னார்க் குடாக்கடலும், கிழக்கில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் மன்னார் மாவட்டமும் உள்ளன.
இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].