கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- குமாரபுரம்
- பரந்தன்
- உமையாள்புரம்
- ஆனையிறவு
- தட்டுவான்கொட்டி
- குரக்கன்கட்டு
- ஊரியான்
- முரசுமோட்டை
- கண்டாவளை
- பேரிக்குளம்
- கல்மடுநகர்
- தர்மபுரம்
- புளியம்பொக்கணை
- புன்னைநீராவி
- பிரனந்தனாறு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும், கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டமும், தெற்கிலும் மேற்கிலும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன.
இப்பிரிவு 318 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].