உள்ளடக்கத்துக்குச் செல்

பூக் ஏவுகணை அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9K37 பூக்
நேட்டோ குறிப்பிடும் பெயர்:
SA-11 காட்ஃப்லி, SA-17 கிரிஸ்லி
பூக்-எம்1-2 வான் பாதுகாப்பு அமைப்பு - 2010இல்
பூக்-எம்1-2 வான் பாதுகாப்பு அமைப்பு - 2010இல்
2011இல் பூக்-எம்1-2 வான் பாதுகாப்பு அமைப்பு in 2010
வகைநடுத்தரத் தொலைவு நில வான் ஏவுகணை அமைப்பு
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1979–நடப்பில்
பயன் படுத்தியவர்நடப்பு மற்றும் முந்தைய இயக்குபவர்கள் பட்டியல் காணவும்
போர்கள்போர் சேவை காண்க
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்அல்மாசு-அன்டெ:
டிக்கொமிரோவ் கருவி வடிவமைப்பிற்கான அறிவியல் ஆய்வு கழகம் (தலைமை வடிவமைப்பாளர்)
இலுலெவ் நோவாடோர் (நிலவான் ஏவுகணை வடிவமைப்பாளர்)
எம்என்ஐஐஆர்ஈ அல்ட்ஏர் (கடற்படை பதிப்பு வடிவமைப்பாளர்)
என்ஐஐஐபி (நுணங்குமேற்பார்வை கதிரலைக் கும்பா வடிவமைப்பு)
டோல்கொபுருட்னி அறிவியல் தயாரிப்பு நிலையம் (ஏவுகணைகள்)
உல்யானோவ்ஸ்க் எந்திர ஆலை (டெலார்கள்)
கலினின் எந்திர உருவாக்க ஆலை (டெல்கள்)[1]
மெட்ரோவேகன்மாசு (ஜிஎம் வண்டிக் கூடு)
மாற்று வடிவம்9K37 "Buk", 9K37M, 9K37M1 "Buk-M1", 9K37M1-2 "Buk-M1-2", 9K37M1-2A, 9K317 "Buk-M2", "Buk-M3"
naval: 3S90 (M-22), 3S90M, 3S90E1, 3S90M1

பூக் ஏவுகணை அமைப்பு (Buk missile system, உருசியம்: "Бук"; /bʊk/) சோவியத் ஒன்றியத்தாலும் அதன் பின்வந்த உருசியாவாலும் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள தன்னுந்து நடுத்தரத் தொலைவிற்கான நில வான் ஏவுகணை அமைப்புக் குடும்பம் ஆகும். இது சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த-, உலங்கு, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

பூக் ஏவுகணை இடம் பெயரக்கூடிய, கதிரலைக் கும்பா வழிகாட்டு நில வான் ஏவுகணை அமைப்பாகும். இதில் நான்கு அங்கங்கள் உள்ளன: தேடிக் கண்டுபிடிக்கும் மற்றும் குறிவைக்கும் கதிரலைக் கும்பாக்கள், கட்டளைக் கூறு, ஏவுகணை செலுத்திகள், ஏற்பாட்டியல் கூறுகள். இவை நான்கும் சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள வண்டியொன்றில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இதனை மற்ற படைத்துறையினருடன் இடம் மாற்றி எடுத்துச் செல்லவியலும். இதன் அமைவிடம் மாறக்கூடியதால் இதனைக் கண்டுபிடித்து அழிப்பது எதிரிகளுக்கு கடினமாக இருக்கும்.

  • தேடிக் கண்டுபிடிக்கும் கதிரலைக் கும்பா அங்கம் (பல்வேறு வேறுபாடுகளில் இதன் திறன் மாறுபடும்) தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கை அடையாளம் காணவும், பின்தொடரவும் குறி வைக்கவும் உதவுகிறது.
  • கட்டளைக் கூறு "நட்பான" படை வானூர்திகளை எதிரிகளுடையதிலிருந்து (நட்பா எதிரியா அடையாளம்) பிரித்தறியவும், பன்மடி இலக்குகளில் முன்னுரிமை தரவும் கதிரலைக் கும்பா தரும் தரவுகளை ஏவுகணை செலுத்திகளுக்கு வழங்கவும் உதவுகிறது.
  • ஏவுகணை செலுத்திக் கூறு பல்வகை ஏவுகணைகளை தாங்கிச் செல்லவும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை குறி வைக்கவும் பயன்படுகிறது.
  • ஏற்பாட்டியல் கூறு கூடுதல் (மீள்சுமையேற்று) ஏவுகணைகளையும் மற்ற வழங்கல்களையும் அமைப்பிற்கும் இயக்குபவர்களுக்கும் தேவையான உதிரி பாகங்களையும் கொண்டுள்ளது.

பொதுவாக, இவ்வமைப்பு வாய்ப்புள்ள இலக்குகளை அடையாளம் கண்டு (ரேடார்), குறிப்பிட்ட இலக்கை தெரிந்தெடுத்து (கட்டளை), ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்துவதோடு (ஏவுகணை செலுத்தி), அமைப்பை மீள்சுமையேற்றுகிறது (ஏற்பாட்டியல்). ஏவுகணைகளுக்கு துவக்கத்தில் இலக்கை நோக்கி ரேடார் பிணைப்புத் தேவைப்படுகிறது; பின்னர் ஏவுகணையிலுள்ள ரேடார் துல்லியமான வழித் திருத்தங்களை மேற்கொள்கிறது. ஏவுகணையிலுள்ள அண்மிய மின்உருகி எப்போது வெடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதனால் விரிந்து பரவும் ஏவுகணைப் பகுதிகள் இலக்கை தடுத்து அழிக்கிறது. ஏவுகணையும் இலக்கும் (2000 மை/மணி/3200 கிமீ/மணி அல்லது 3000 அடி/வி, 910 மீ/விநாடிக்கும் மேலான) வேகத்தில் சந்திக்கும் போது அண்மிய மின்உருகி "அழிப்பு வாய்ப்பை" கூட்டுகிறது.

மேற் சான்றுகள்

[தொகு]
  1. "Big Russian flotilla led by Admiral Kuznetsov carrier heads for Syrian port". DEBKAfile. 21 August 2008. http://www.debka.com/article/7813. பார்த்த நாள்: 23 March 2010. 
  2. "Russian mobile surface-to-air missile systems". RIA Novosti. 8 February 2007 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130402133757/http://www.en.rian.ru/photolents/20070208/60402179.html. பார்த்த நாள்: 18 November 2008. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்_ஏவுகணை_அமைப்பு&oldid=3810144" இலிருந்து மீள்விக்கப்பட்டது